(மாணவர் இந்தியா மாநில செயலாளர் A.முஹம்மது அஸாருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை...) தமிழகத்தில் மாணவ மாணவிகளின் சமூக அக்கறை, நல்லிணக்கம், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் இயக்கமாக சாரணர்-சாரணிய இயக்கம் செயல்பட்டு வருகிறது.அப்படிப்பட்ட இயக்கத்திற்கு இதுநாள் வரை தகுதி படைத்த நபரே தலைவராக இருந்துள்ளனர்.இதற்கு மாறாக தற்போது தமிழக சாரண-சாரணிய இயக்கத்தின் தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா வை நியமிக்க தமிழக அரசு முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது. விதிகளை மாற்றி அரசியல் சார்புடைய ஒருவரை,மத்திய அரசின் வாரிய பதவி வகிப்பவரை தலைவராக நியமிக்க முயற்சி செய்வது தமிழக மாணவ-மாணவிகளிடையே பாசிஸ சிந்தனையை புகுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க வின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது. மேலும் இதுபோன்ற பதவிகளில் தகுதி படைத்த சகிப்புத்தன்மையுடையவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என்று மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவண், A.முஹம்மது அஸாருதீன், மாநில செயலாளர், மாணவர் இந்தியா. 12.09.17
Author: admin
அரசு ஊழியர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும்..! மஜக வேண்டுகோள்.!!
( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த பணி முறையை ஒழித்துவிட்டு நிரந்தர பணிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டொ-ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் அரசு பணிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல், அவர்களை அழைத்து தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலை நிறுத்தத்தை முறியடிப்பதில் கவனம் செலுத்தாமல், அவர்களோடு சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரமுடியும். இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவன். M. தமிமுன் அன்சாரி MLA, 12.09.17
IKP தம்மாம் மண்டலத்தின் புதிய கிளை உதயமானது.
தம்மாம். செப்.12., கடந்த 08-09-17 வெள்ளிகிழமை இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) தம்மாம் மண்டல நிர்வாகிகள் கூட்டம் மண்டல செயலாளர் செய்யது அலி தலைமையிலும் மண்டல பொருளாளர் ஹஜ் முகம்மது அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் மண்டல துனைச் செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள் மற்றும் ஊடக துறை செயலாளர் சாகிப் அவர்கள் கலந்து கொண்டு சிற்ப்பித்தார்கள். மண்டல செயலாளர் செய்யது அலி அவர்கள் அனுமதியிலும் மண்டல நிர்வாகிகள் ஒத்துழைப்புடனும் புதிய தம்மாம் கிளை நிர்வாகிகள் கிழ்கண்டவாறு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்கள்... தம்மாம் மண்டல சீகோ கிளை நிர்வாகிகள் விபரம். 1) செயலாளர் : அஷ்ரப் அவர்கள் சிதம்பரம். 2) பொருளாளர் : சாகுல் ஹமீது (சேத்தா நானா) அவர்கள் (சிக்கல்) 3) துணை செயலாளர் : ஹாஜா சாஹிப் அவர்கள் (நாகூர்) 4) கிளை ஒருங்கிணைப்பாளர் : அப்துல்லாஹ் அவர்கள் (நிரவி) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தகவல்: IKP ஊடக பிரிவு, தம்மாம் மண்டலம். 08.09.17
ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிராக மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!!
வேலூர்.செப்.12.,வேலுர் கிழக்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி-யின் (MJK) சார்பில் விக்டோரியா தூண் அருகில் மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் முஹம்மத் ஜாபர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர்கள் முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம்,சையத் உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மஜக மாநில பொருளாளர் S.S..ஹாரூன் ரஷீத், அவைத்தலைவர் மவ்லவி S.S. நாசர் உமரி, மாநில செயலாளர் A.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் ஜாகீர் உசேன் நன்றியுரை கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக மாநில செயற்க்குழு உறுப்பினர் சையத் அபுதாஹிர், காஞ்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அன்வர், வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் S.MD.நவாஸ், இன்சாப், மாநில துணை செயலாளர் ஆலியார் அதாவுல்லா, நாம் தமிழர் கட்சி தோழர் வீர.ரகு, குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் V.முபாரக்
IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி..
தம்மாம்.செப்.12., இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஈகை பெருநாள் சந்திப்பை தொடர்ந்து, கடந்த 08/09/2017 வெள்ளி கிழமை தம்மாம் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு HOLIDAY ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் #செய்யது_அலி அவர்கள் தலைமை வகிக்க பொருளாளர் ஹஜ் முகம்மது முன்னிலை வகித்தார்கள். இந்த கூட்டத்தில் துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள், துணை செயலாளர் நாகூர் ஜாகிர் உசேன் அவர்கள், ஊடக துறை செயலாளர் சாஹிப் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் தம்மாம் சீகோ கிளை தொடங்குவது என்று முடிவெடுக்கபட்டது, தம்மாம் மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்க புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் புதிதாக தம்மாம் சீகோ கிளையில் பொறுப்பேற்க உள்ள கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இனிதே கூட்டம் நிறைவு பெற்றது. தீர்மானங்கள். 1) IKP உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது புதிய கிளைகள் தொடங்குவது. 2) IKP யின் மருத்துவ அணியின் செயல்பாட்டை ஊக்குவித்து சவுதி முழுவதும் இரத்ததான சேவையை துரிதபடுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தகவல்: #IKP_ஊடக_பிரிவு #தம்மாம்_மண்டலம்