You are here

ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிராக மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!!

image

image

image

image

வேலூர்.செப்.12.,வேலுர் கிழக்கு  மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி-யின் (MJK) சார்பில் விக்டோரியா தூண்  அருகில் மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர்  மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்கள் தலைமை தாங்கினார்.

மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் முஹம்மத் ஜாபர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர்கள் முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம்,சையத் உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் மஜக மாநில பொருளாளர் S.S..ஹாரூன் ரஷீத், அவைத்தலைவர் மவ்லவி S.S. நாசர் உமரி, மாநில செயலாளர் A.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் ஜாகீர் உசேன் நன்றியுரை கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக மாநில செயற்க்குழு உறுப்பினர் சையத் அபுதாஹிர், காஞ்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அன்வர், வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் S.MD.நவாஸ், இன்சாப், மாநில துணை செயலாளர் ஆலியார் அதாவுல்லா, நாம் தமிழர் கட்சி தோழர் வீர.ரகு, குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் V.முபாரக் மற்றும் வேலுர் கிழக்கு மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்ச்சிமிக்க எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING,
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
11.09.17.

Top