ஜோலார்பேட்டை.செப்.14., பரோலில் வெளிவந்திருக்கும் பேரறிவாளன் வீட்டிற்கு மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் வருகை தந்தனர். தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருப்பதால் தற்போது கருணாஸ் MLA அவர்கள் வரமுடியாமல் போயிற்று. ஜோலார்பேட்டைக்குள் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் மஜகவினர் புடைசூழ இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தந்தனர். வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் பேரறிவாளன் கண்ணீர் மல்க கட்டிபிடித்துக் கொண்டார். அன்புத்தாய் அற்புதம்மாள் அவர்கள் குதூகலமும் மகிழ்ச்சியும் பொங்க சிரித்த முகத்துடன் வரவேற்று மகனுக்கு பரோல் கிடைத்த நிகழ்வை பரிமாறிக்கொண்டார். அந்த எளிய வீட்டில் பெரியார், பிரபாகரன், திலீபன் ஆகியோரின் புகைப்படங்கள் காட்சியளித்தன. அவர்களின் வீட்டிற்கு தியாகி செங்கொடி இல்லம் என்று இப்போது பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒரு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை போல அந்த குடும்பமே கொண்டாட்டத்தோடு வரவேற்று மகிழ்ந்தது. சட்டசபையில் மூன்று கட்சிகளின் சார்பில் நீங்கள் மூவரும் ராஜதந்திர நகர்வுகள் தான் பேரறிவாளனுக்கு பாரோல் கிடைக்க சாத்தியமாயிற்று என்று குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் கூறினர் . பேரறிவாளன் மிகுந்த நெகிழ்ச்சியோடு இருவருடனும் அளவாளவினார். திரும்ப திரும்ப நன்றி கூறினார்.. அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழமான உரையாடல் நடைபெற்றது. அப்போது கிறிஸ்தவ அருட் சகோதரிகள் வருகை
Author: admin
தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கில் மாணவர் இந்தியா..!
வேலூர் செப்.13.,வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள C.அப்துல் ஹக்கிம் பொறியியல் கல்லுரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு CIVIL -O-FEST 2K17 (technical symposium) நேற்று (12.09.2017) நடைபெற்றது. பவுண்டேசன் மார்க்கிங், பேப்பர் பிரசன்டேசன், போஸ்டர் பிரசன்டேசன், பிரிட்ஜ் பேட்டலிங், கூயிஃஜ், ஆடோ கேடு போன்ற பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வேலூர் மற்றும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லுரியிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்று பலனடைந்தனர். இக்கருந்தரங்கிற்கு மாணவர் இந்தியா சார்பாக ஸ்பான்சர்ஷிப் செய்யப்பட்டதற்கு C.அப்துல் ஹக்கிம் பொறியியல் கல்லூர் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. தகவல்; #ஊடகபிரிவு #மாணவர்_இந்தியா 12.09.17
IKP தம்மாம் மண்டலம் சீகோ சிட்டி கிளை நிர்வாகிகள் ஆலோசனை…
தம்மாம்.செப்.13., இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) தம்மாம் மண்டலம் சீகோ சிட்டி கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல ஊடக துறை செயலாளர் சாஹிப் அவர்கள் முன்னிலையில் கிளை செயலாளர் அஷ்ரப் அவர்கள், பொருளாளர் சேத்தா நானா அவர்களும் கிளை, ஒருகினைப்பாளர் அப்துல்லாஹ் அவர்கள், ஆகியோர் ஆலோசனை நடத்தினார். மேலும் இக்கூட்டத்தில் புதிய கிளையின் வளர்ச்சியில் எடுத்து செல்லுவது குறித்தும் புதிதாக கிளைக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் யுக்திகள் குறித்தும் ஆலோசனை செய்தார்கள். வரும் காலங்களில் தம்மாம் மண்டலம் சார்பில் நடைபெற உள்ள இரத்தம் தானம் முகாம்மிர்க்கு பெரிய அளவில் உறுப்பினர்களை திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தகவல். #IKP_ஊடக_பிரிவு, தம்மாம் மண்டலம். 13.09.17
திருப்பூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்…!
திருப்பூர்.செப்.12., மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைவதற்காக இன்று மதியம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்ட இளைஞர்கள், இன்று இரவு 8மணியளவில் மாவட்ட அலுவலகம் வந்தனர். மஜக பொதுச் செயலாளரரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி MLA அவர்களின் செயல்பாடுகளை ஊடகங்களின் வாயிலாக பார்த்து வருகிறோம், அவரது தெளிவான சிந்தனைகளையும் அனைவரோடும் எளிமையாக நெருங்கி பழகும் பண்பையும், குறிப்பிட்ட சாரார் என்றில்லாமல் சட்டசபையில் சமூக நீதி சமூக நல்லிணக்கம் ஜனநாயக அரசியல்.! என சட்டமன்ற சிறப்பான செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து, வளர்ந்து வரும் எளிமையான இளம் தலைவராக வலம் வரும்... எம்.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையேற்று ... மாவட்ட செயலாளர் I.ஹைதர் அலி அவர்கள் முன்னிலையில் உறுப்பினர் படிவத்தை நிரப்பி, தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கரட்டாங்காடு பகுதி இளைஞர்கள்.! சமூக பணியில் இணைத்துக்கொண்ட இளைஞர்கள் பெயர்கள் வருமாறு.. J.செளகத் அலி அவர்கள் J.ஈஸ்வரன் அவர்கள். A.சுகனேஸ் அவர்கள் T.பிரான்சிஸ் அவர்கள் A.மன்சூர் அலிகான் அவர்கள் ஆகியோர். இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் முஷ்தாக் அஹமது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் காதர் கான், திருப்பூர் மீரான், பெரிய தோட்டம் நிர்வாகி அபுதாஹீர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 12_09_2017
மஜக கோவை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!
கோவை.செப்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், தொழிற் சங்க மாவட்ட துணை செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் பகுதி நிர்வாகிகள் காஜா, முத்தலி, ஜாபர், அபு, இம்தியாஸ், அக்பர், ஜமால், ஹாருண் ரஷீது, அஜீஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) மஜக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது., 2) விரைவில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது., தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 11.09.17