You are here

மஜக நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக மருத்துவருக்கு அன்னை தெரசா விருது…!


நெல்லை நவ.04.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக கல்லூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் DR.A.S.அஸ்ரப் அலி MBBS.DipCH அவர்கள் கொரோனா காலசேவையில் தானும் தன் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்ட நிலையிலும் இன்றளவும் மனம்தளராமல் மருத்துவ பணியை சேவையாக தொடர்ந்து மக்களுக்கு சிகிச்சையளித்துவருவதை பாராட்டி மருத்துவ சேவை அணியின் சார்பாக அன்னை தெரசா விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.

இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் A.R.சாகுல் ஹமீது மற்றும் மருத்துவ சேவை அணி செயலாளர் புகாரி ஆகியோர் விருதை வழங்கினர், மேலும் நிகழ்வில் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல்லா, பாளைபகுதி துணை செயலாளர் பிரபாகரன், மனித உரிமைபாதுகாப்பு அணி முருகேசன், MJTS ஹபிபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லைமாவட்டம்
02-11-2020

Top