#பேரறிவாளனுக்கு_பரோலை_நீடிக்க_வேண்டும்! #ஆயுள்_தண்டனை_கைதிகளை_முன்விடுதலை_செய்ய_வேண்டும்! #நாகையில்_முதல்வரை_நேரில்_சந்தித்து_தமிமுன்_அன்சாரி_MLA_வலியுறுத்தல்! நாகை. செப்.20., MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று நாகப்பட்டினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் அவர்கள் வருகை தந்தார். சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், பயணியர் மாளிகையில் முதல்வரை சந்தித்து M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது பேரளிவாளனுக்கு பரோலை மேலும் 1 மாதம் நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை சாதி, மத, அரசியல், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற மனுவையும் கொடுத்து, அது குறித்து விவாதித்தார். பேரளிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து,சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்பதாகவும், சிறைவாசிகள் விடுதலை குறித்து வேகமாக பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், இதில் உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டல்படி பாரபட்சமின்றி நடப்போம் என்றும் முதல்வர் கூறினார். பிறகு நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகளின் பட்டியலையும் வழங்கினார். நாகப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்தி செயல்படுத்திட வேண்டும், நாகப்பட்டினத்திற்கு மருத்துவக் கல்லூரியை உருவாக்கி தரவேண்டும், நாகூர், பனங்குடி, பட்டினச்சேரி மக்களை பாதிக்கும் "மார்க்" துறைமுகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும்,நரிமணம்-உத்தம சோழபுரம் அருகே வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டவேண்டும்,
Author: admin
மஜக மத்திய சென்னை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!
சென்னை.செப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் இனப்படுகொலையை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிக மக்களை பங்கேற்க செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் சமீம் அஹமது ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தைப் பற்றி எடுத்துரைத்தனர். இதில் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_மாவட்டம் 20.09.17
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!
திருவள்ளூர்.செப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோயோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் S.M.நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் கலந்துகொண்டார்கள். மேலும் இதில் எதிர்வரும் 22.09.17 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துவரும் இன அழிப்பை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகப்படியான மக்களை திரட்டி கலந்துகொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜாபர், மாவட்ட துணை செயலாளர் கரிமுல்லாஹ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நிஜாம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 19.09.17
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் !!
கோவை.செப்.19.,மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இளைஞரணி மாவட்ட செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் K.செய்யது இப்ராஹிம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் A.அபு, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் HM.அனிபா, தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.சம்சுதீன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் AK.முஹம்மது சலீம் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) எதிர்வரும் 24.09.17 அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டுவது என முடிவுசெய்யப்பட்டது, 2) 20.09.17அன்று மாவட்ட செயற்குழுகூட்டம் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது, தகவல். #மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 18.09.17
சங்கரன்கோவிலில் மஜகவின் புதிய கிளை உதயம் !
நெல்லை.செப்.18., நெல்லை மேற்கு மாவட்டம் சங்கரன் கோவிலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை மாவட்ட செயலாளர் ஐ.மீரான் அவர்கள் தலைமையில் நேற்று 17-09-2017 அன்று துவங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் M.செய்யது அலி, மா.து. செயலாளர்கள் நிலா B. சாதிக், பொன்னானி அபுதாகீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பண்ணையார் இபுராகிம், தென்காசி நகர செயலாளர் நிலா.செய்யது அலி, சிறப்பு அழைப்பாளராக கண்மணி காதர் இராஜபாளையம் நகர செயலாளர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மேற்கு_மாவட்டம் 18-09-2017