மஜக மத்திய சென்னை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!

image

image

சென்னை.செப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் இனப்படுகொலையை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிக மக்களை பங்கேற்க செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் சமீம் அஹமது ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தைப் பற்றி எடுத்துரைத்தனர்.

இதில் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_மாவட்டம்
20.09.17