#பேரறிவாளனுக்கு_பரோலை_நீடிக்க_வேண்டும்!
#ஆயுள்_தண்டனை_கைதிகளை_முன்விடுதலை_செய்ய_வேண்டும்!
#நாகையில்_முதல்வரை_நேரில்_சந்தித்து_தமிமுன்_அன்சாரி_MLA_வலியுறுத்தல்!
நாகை. செப்.20., MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று நாகப்பட்டினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் அவர்கள் வருகை தந்தார். சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், பயணியர் மாளிகையில் முதல்வரை சந்தித்து M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
அப்போது பேரளிவாளனுக்கு பரோலை மேலும் 1 மாதம் நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை சாதி, மத, அரசியல், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற மனுவையும் கொடுத்து, அது குறித்து விவாதித்தார்.
பேரளிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து,சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்பதாகவும், சிறைவாசிகள் விடுதலை குறித்து வேகமாக பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், இதில் உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டல்படி பாரபட்சமின்றி நடப்போம் என்றும் முதல்வர் கூறினார்.
பிறகு நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகளின் பட்டியலையும் வழங்கினார்.
நாகப்பட்டினம் துறைமுகத்தை மேம்படுத்தி செயல்படுத்திட வேண்டும், நாகப்பட்டினத்திற்கு மருத்துவக் கல்லூரியை உருவாக்கி தரவேண்டும், நாகூர், பனங்குடி, பட்டினச்சேரி மக்களை பாதிக்கும் “மார்க்” துறைமுகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும்,நரிமணம்-உத்தம சோழபுரம் அருகே வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டவேண்டும், நாகூரில் வெட்டாற்றின் கரையில் மீனவர்களின் நலன் காக்கும் வகையில் வெட்டாற்றின் மறு கரையில் கற்களை கொட்டி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும், நாகை தாமரைக் குளத்தை சீரமைத்து தர வேண்டும், நாகை, நாகூர் கடற்கரையை மேம்படுத்தி தர வேண்டும், பனங்குடி ஏரியை தூர்வாரி தர வேண்டும் என 9 கோரிக்கைகளையும் பட்டியலிட்டு அதன் முக்கியத்துவம் குறித்தும் முதல்வரிடம் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விளக்கிப் பேசினார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து ஆவணம் செய்வதாகவும் கூறினார்.
முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்தவுடன் பத்திரிக்கையாளர்கள் முதல்வரின் சந்திப்பு குறித்து M.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் கேட்டனர்.
முதல்வர் அவர்கள் எனது தொகுதிக்கு வருகை தந்திருக்கிறார். அவரை வரவேற்பதும், மரியாதை செய்வதும் ஒரு அரசியல் நாகரீகம். அந்த அடிப்படையில் அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து தொகுதிக் கோரிக்கைகளையும், இதர மக்கள் கோரிக்கைகளையும் அவரிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.
தகவல்:-
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
20.09.17