திருப்பூர்.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் முக்கிய அஜண்டாவாக வருகின்ற 24_09_2017 ஞாயிற்றுக் கிழமை கோவை மாநகர் மாவட்டம் சார்பில் வின்செண்ட் ரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டது. மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் பேசும் போது தற்போதைய அரசியல் அரங்கில் அதிர்வலைகள் ஏற்படுத்தி வரும் மூன்று MLA க்கள் நமது மஜக பொதுச்செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி_MLA, கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் #உ=தனியரசு_MLA, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் #சேது_கருணாஸ்_MLA, ஆகியோரை சரியான நேரத்தில். இந்த முத்தான மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து கோவை மாவட்ட நிர்வாகம் மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்கள், மேலும் கோவையில் நடைபெறும் பணிகளை பார்த்தால்., நடக்க இருப்பது பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என வியக்கும் வகையில் உள்ளது., பாசிச வாதிகள் மக்களை பிளவு படுத்த துடிக்கும் நேரத்தில்., '' பாசிசத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை வென்றெடுப்போம் " என்ற ஒற்றை முழக்கத்தோடு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர்
Author: admin
மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்..!
கோவை.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் K.செய்யது இப்ராஹிம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் A.அபு, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.சம்சுதீன், சுற்றுச் சூழல் அணி மாவட்ட செயலாளர் AK.முஹம்மது சலீம் மற்றும் பகுதி செயலாளர்கள் பூ.காஜா, ஜமால், ஜாபர் அலி, காஜா உசேன், சமீர் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன... 1.வருகின்ற 24.9.17அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டி சிறப்பாக கூட்டத்தை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 20.09.17
நாகை மருத்துவமனையில் MLA ஆய்வு!
நாகை.செப்.21., நாகை அரசு பொது மருத்துவமனைக்கு தமிமுன் அன்சாரி MLA வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை பார்வையிட்டு அவை தூய்மையாக பராமரிக்க படுவதற்காக மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்களிடம் தேவையான கோரிக்கைகளை பெற்றுக் கொண்டு அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் 21_09_17
காரைக்கால் நகராட்சி ஆனையாளரிடம் மஜக புகார் மனு!
காரைக்கால்.செ.21., நேற்று காரைக்கால் நகராட்சி ஆணையாளரை சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) நிர்வாகிகள் கோரிக்கை மனுவாக காரைக்காலில் பேனர் வைக்க தடை சட்டம் இருந்தும் மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையூராகவும், போக்குவரத்து நெருக்கடிகளுக்கு காரணமாக தற்போது அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது, ஆதலால் இடையூறாக இருக்கும் பேனர்களை உடனே அகற்ற வேண்டும். எனவும் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வண்ணமாக சாலைகளில் திரிந்து கொண்டு இருக்கும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் A.R.பாவா பஹ்ருதீன், மாவட்ட பொருளாளர் A. அப்துல் பாசித், மாவட்ட துனை செயலாளர் ஹாஜா பகுருதீன், குலாம் ரசூல் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #காரைக்கால்_மாவட்டம் 20_09_2017
மஜக திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!
திண்டுக்கல்.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச்செயலாளர் திண்டுக்கல் M.அன்சாரி, கொள்கை விளக்க அணி துணைச்செயலாளர் C.A.சாந்து முகமது ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் A.அபி இரயில்வே, A.அப்துல் காதர் ஜெய்லானி, S.சரவணன், R.உமர் அலி, மருத்துவ அணி செயலாளர் B. காதர் ஒலி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் R.M.குத்புதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா, வர்த்தக அணி பாபு (மாஸ்ட்டர்), நகர பொறுப்பு குழு நிர்வாகிகள், ஆட்டோ ஒட்டுநர் சங்க நிர்வாகிகள், வேடசந்தூர், வடமதுரை ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) எச் ராஜாவை -சாரணர் இயக்க தேர்தலில் தோற்க்கடித்த ஆசிரியர் பெருமக்களை பாராட்டுகிறோம், வெற்றி பெற்ற ஆசிரியர் மணி அவர்களை இக்கூட்டத்தின் சார்பாக பாராட்டுகின்றோம். 2) மியான்மார் வாழ் மக்களுக்காக அனைத்து சமுக மக்களையும் பெரும் திரளாக திரட்டி மிகப் பெரிய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 3) பொதுக்கூட்டத்திற்க்கு கண்டன உரை ஆற்ற வருகைதரும் மூன்று MLA _க்களுக்கும் சிறப்பு வரவேற்பு அளிப்பதெனவும், பிளக்ஸ், சுவர் விளம்பரங்கள் செய்வதெனவும் இக்கூட்டத்தில்