You are here

காரைக்கால் நகராட்சி ஆனையாளரிடம் மஜக புகார் மனு!

image

image

காரைக்கால்.செ.21., நேற்று காரைக்கால் நகராட்சி ஆணையாளரை சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) நிர்வாகிகள் கோரிக்கை மனுவாக காரைக்காலில் பேனர் வைக்க தடை சட்டம் இருந்தும் மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையூராகவும், போக்குவரத்து நெருக்கடிகளுக்கு காரணமாக தற்போது அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது,

ஆதலால் இடையூறாக இருக்கும் பேனர்களை உடனே  அகற்ற வேண்டும். எனவும் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வண்ணமாக சாலைகளில் திரிந்து கொண்டு இருக்கும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக
மனு அளித்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் A.R.பாவா பஹ்ருதீன், மாவட்ட பொருளாளர் A. அப்துல் பாசித், மாவட்ட துனை செயலாளர் ஹாஜா பகுருதீன், குலாம் ரசூல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#காரைக்கால்_மாவட்டம்
20_09_2017

Top