சென்னை.செப்.23., மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம் இனப்படுகொலையை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் கண்டன உரையாற்றினர். மியான்மரில் இனப்படுகொலையை அரங்கேற்றும் ஆங் சாங் சூகியின் உருவப்படத்தை மனிதநேய சொந்தங்கள் எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, A.சாதிக் பாட்ஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், திருமங்களம் சமீம், சைபுல்லாஹ், பல்லாவரம் ஷபி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், மீனவர் அணிச் மாநில செயலாளர் பார்த்திபன், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹிர், அப்துல் காதர், யூசுப், மாவட்ட நிர்வாகிகளான பிஸ்மில்லாஹ் கான், நாசர், சிந்தா மதார், ரஹ்மத்துல்லாஹ், அக்பர் ஹுசைன், இக்பால் முன்னாள் மாவட்ட நிர்வாகி அஜீம் ஆகியோர் பங்கேற்றனர். மனிதநேய சொந்தங்கள், பொதுமக்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர்களான பீர் முகம்மது,
Author: admin
தமிழக ஹாஜிகள் வருகை..! மஜக பொதுச் செயலாளர் வரவேற்றார்..!!
சென்னை.செப்.23., தமிழக ஹஜ் கமிட்டி சார்பில் புனித மெக்காவுக்கு யாத்திரை சென்று திரும்பிய ஹாஜிகள் தாயகம் திரும்புகின்றனர். இன்று விடிகாலை 1மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹாஜிகளை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வரவேற்று நலம் விசாரித்தார். பயணங்கள் குறித்த நிறை, குறைகளையும் கேட்டறிந்தார், ரோஜாப் பூக்களின் புன்னகையோடும், அன்று பிறந்த குழந்தைகளைப் போன்ற பூரிப்போடும் திரும்பிய ஹாஜிகளுக்கு சவூதி அரசு வழங்கும் 5லிட்டர் ஜம் ஜம் தண்ணீரையும் வழங்கினார். இந்நிகழ்வில் வடபழனி இமாம் தர்வேஸ் ரஸாதி, மஜக மாநில செயலாளர் தைமிய்யா, மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது ஆகியோரும் கலந்து கொண்டனர். வெளியே ஹாஜிகளை வரவேற்க குடும்பம், குடும்பமாக உறவினர்கள் காத்திருந்தனர். அவர்கள் மஜக பொதுச் செயலாளருக்கு கைக் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஹாஜிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விமான நிலைய ஊழியர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ்கள், விமான நிலைய காவலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுடப_அணி #MJK_IT_WING சென்னை 23.09.17
மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக காயல்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்….!
தூத்துக்குடி.செப்.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக) தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் சார்பில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றாதே என வலியுறுத்தியும் காயல்பட்டினம் நகர செயலாளர் #S.M.ஜிப்ரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக இணைப் பொதுச்செயலாளர் K.M.முகமது மைதீன் உலவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய சமாதான பேரவை தலைவர் ஹாமித் பக்ரி மன்பயி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை அப்துல் வாகித் ஆகியோர் கலந்து கொண்டு கன்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீரா சாகிப், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ராசுகுட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் செய்யதுஅலி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜா முகம்மது ஆகிய ஜக நிர்வாகிகள் மற்றும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் அபுல் ஹசன் கலாமி, SDPI
தோழர் திருமுருகன் காந்தி வேலூர் மஜக அலுவலகம் வருகை..!!
வேலூர்.செப்.22., மே-17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மற்றும் அவர்களுடைய சக நிர்வாகிகள் இன்று சகோ.பேரறிவாளன் அவர்களை சந்தித்துவிட்டு #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்து #மஜக சகோதரர்களை சந்தித்தனர். தோழர்களை மஜக வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு தலைவர் #S_G_அப்சர்_சையத் அவர்கள் வரவேற்றார். மேலும் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பேசுகையில், தோழர் பேரறிவாளன் அவர்களுடையை பரோலிற்காகவும், தன்னுடைய விடுதலைக்காகவும் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தோழர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பெரும்முயற்சி மேற்கொண்டார் எனவும், மேலும் மே-17 இயக்கத்தின் பெரும்பாலான போராட்டங்களில் மஜக மாநில பொருளாளர் தோழர். #S_S_ஹாரூன்_ரசீது அவர்கள் கலந்துகொண்டுள்ளார் என கூறி பெருமிதமடைந்தார். அவர் கூறிய வார்த்தைகள் மஜக தோழர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த இனிய சந்திப்பிற்கு பிறகு தோழர்கள் பிரியாவிடை பெற்றனர். இதில் மஜக மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர். தகவல்; மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 22.09.2017
ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழர்கள் திரண்டனர்..!
சென்னை.செப்.22., இன்று சென்னையில் மியான்மர் அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான தமிழர்கள் சென்னையில் அணிதிரண்டனர். கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை முழுவதும் மூன்று கட்சிகளின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. ரோஹிங்ய மக்களின் கண்ணீரை கூறும் துண்டு பிரசுரங்கள் ஆங்காங்கே விநியோகிக்கப்பட்டன. இதனால் இன்று மதியம் 4 மணி முதலே போராட்டம் நடைபெற்ற துறைமுகம் பகுதியில் கட்சி சார்பற்ற பொதுமக்கள் குழுமத் தொடங்கினர். பாரி முனை எங்கும் மூன்று கட்சிகளின் கொடிகள் ஒன்றுமையை பறை சாற்றும் விதமாக கம்பீரமாக பறந்து அனைவரையும் வரைவேற்றுக் கொண்டிருந்தது. 4:30 மணிக்கெல்லாம் காஞ்சி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களை சேர்ந்த மஜகவினர் வாகனங்களில் ரோஹிங்ய மக்களுக்கு ஆதரவாக முழக்க மிட்டபடியே பாரிமுனை பகுதியில் நுழையத் தொடங்கினர். அதுபோல கொங்கு இளைஞர் பேரவையினரும், முக்குலத்தோர் புலிப்படையினரும் " நமது மாமன் - மச்சான்களுக்கு குரல் கொடுப்போம்" என்ற முழக்கங்களோடு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பியப்படியே அலை, அலையாய்