கடலூர்.செப்.27., கடந்த சில தினங்களுக்கு முன் மறைந்த கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக- மமக தலைவர் அப்துல் பாசித் அவர்கள் இல்லத்திற்க்கு நேரில் சென்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இவர்களுடன் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், அபுதாபி மண்டல செயலாார் தையுப், பொருளாலர் ஹக்கிம், மாஜக லால்பேட்டை நிர்வாகிகள் ஜாகிர், ஜாபர் சாதிக், மற்றும் மானியம் ஆடுர் நிர்வாகி பைரோஸ் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
Author: admin
கீழடி அகழ்வாய்வு பணிகள் தொடர வேண்டும்…! மஜக வேண்டுகோள்…!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடைபெற்று வந்த அகழ்வாய்வு பணிகள் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழர்களிடையே கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்களின் 2 ஆயிரம் ஆண்டு கால பாரம்பர்யத்தையும், வரலாற்றையும் துல்லியமாக எடுத்துக்கூறும் ஆதாரங்கள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிலருக்கு பிடிக்கவில்லை. அதன் விளைவாகவே தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அங்கு சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருந்ந அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவரை இடமாற்றம் செய்தனர். தற்போது திட்டமிட்டே அப்பணிகளில் தொய்வுகளை ஏற்படுத்தி, அகழ்வாராய்ச்சிப் பணியை இழுத்து மூடும் சதியை செய்துவருகின்றனர். அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். எனவே கீழடியில் உள்ள 110 ஏக்கர் நிலத்தில் மொத்தமாக அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் நியமாக நடைபெறச் செய்ய, மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணனை இப்பணியில் நியமிக்க, மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும். தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும் கீழடி கண்டுப்பிடிப்புகளை சேகரித்து அங்கு ஒரு அருங்காட்சியகம் ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண்:- #M_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 26.09.2017
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க கொடி மற்றும் பெயர் பலகை அறிமுக விழா!
கோவை.செப்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் கொடி மற்றும் பெயர்பலகை நேற்று கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொழிற்சங்க கொடியையும் பெயர் பலகையும் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA, கோவை மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் A.B.S.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் காஜா மற்றும் நிர்வாகிகள் மக்கான் ஜாபர், ஹக்கீம், ரியாஸ், சுதீர் ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்:- #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 24/09/2017
மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA அவர்களுடன் கோவையில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு!
கோவை.செப்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் CTC.ஜப்பார், அவர்களும் மற்றும் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளும் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர். இச்சந்திப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 25.09.17
கோவையில் குடிசை மாற்று வாரியத்தில் இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார் M.தமிமுன்அன்சாரி MLA…!
கோவை.செப்.25., கோவை குறிச்சிப்பிரிவு அருகே 60-ஆண்டுகளுக்கு மேலாக பல சமூக மக்கள் குடியிருந்து வருகிறார்கள், அண்மையில் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வெள்ளலூர் பகுதியில் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்பட்டு அந்த மக்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர், ஆனால் அங்கு மருத்துவம்,, போக்குவரத்து, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லையென்றும் இடிக்கப்பட்ட வீடுகளில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி MLA அவர்கள் குறிச்சிபிரிவு பகுதிக்கு சென்று இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூறினார். மேலும் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிணத்துக்கடவு பகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 24.09.17