ஆதிதிராவிட சமுதாயம் மற்றும் பழங்குடியின சமுதாய மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் திரும்ப செலுத்த அனைத்து கல்வி கட்டணங்களையும் அரசே வழங்கும் என அரசாணை எண் 6 மற்றும் 92 சொல்கிறது. இதனை கலை அறிவியல் கல்லூரிகள் முழுமையாக பின்பற்றவில்லை. ஆனால் பொறியியல் கல்லூரிகள் நடைமுறைப்படுத்தி வந்தன. இது குறித்து நீதியரசர் N.V. பாலசுப்ரமணியம் குழு வடிவமைத்த கட்டணத் தொகை பட்டியலின் மாணவ-மாணவிகளுக்கு கிடைத்ததால் அதில் 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொறியியல் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. தற்போது நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் ஆதிதிராவிட, பழங்குடியின, மதம் மாறிய கிருஸ்துவ மாணவ, மாணவிகளின் உதவித்தொகையை தமிழக அரசு குறைத்து அரசாணையை வெளியிட்டுருக்கிறது. இதனால், இதுவரை பலனடைந்துள்ள மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். பலரின் படிப்பு பாதியிலேயே நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக அரசு இந்த அரசாணையை ரத்து செய்து, பழைய நிலை தொடர ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவண், #A_முஹம்மது_அஸாருதீன், #மாநில_செயலாளர், #மாணவர்_இந்தியா
Author: admin
PFI மாநாட்டில் மஜக மாநில பொருளாளர் சிறப்புரை..!
சென்னை.அக்.09., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக நேற்று 08.10.2017 மாலை 4.00 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்ற உரிமை முழக்க மாநாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது. M.Com அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பாசிசத்திற்கு எதிராக எழுச்சி உரை நிகழ்த்தினார். இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது, அமீர் அப்பாஸ், துறைமுக பகுதி செயலாளர் குப்பை சீனி, துறைமுக பகுதி துணைச் செயலாளர் பஜார் அபூபக்கர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் துணைச்செயலாளர் M.பக்ருதீன் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம்_சென்னை 08.10.17
ஹஜ் மானியத்தை ரத்து செய்யக்கூடாது! மஜக வேண்டுகோள்!
(மஜக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டு வரும் பயணிகளுக்கான மானியத்தை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஒரு முறைதான் ஒருவர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற சீர்திருத்தங்களை அனைவரும் வரவேற்றார்கள். ஆனால், மானியத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை ஏற்கவே முடியாது. உச்ச நீதிமன்றம் வழிகாட்டியதன் அடிப்படையில் சிறுபான்மையினர் நல அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் ஆலோசனைகள் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்திடம் ஹஜ் மானியம் குறித்து வரலாற்று பின்னணியுடன் மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யாமல், இதற்காக ஒரு பொம்மை குழுவை அமைத்து, அதன் ஆலோசனைகளை அறிவிப்புகளாக வெளியிடுவது ஒரு வகை நாடகமாகும். உச்ச நீதிமன்றம் கூறும் எல்லா விஷயங்கக்ளும் மத்திய அரசு இவ்வாறுதான் பதில் அளிக்கிறதா? காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஏற்கமாட்டோம் என அறிவித்த மத்திய அரசு, ஹஜ் மானிய விஷயத்தில் மட்டும் அக்கறை காட்டுவது அதன் கபட முகத்தை காட்டுகிறது. முன்பு கப்பல்
மஜக வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாக கூட்டம்…!
வேலூர்.அக்.08., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் தலைமையில் ஆம்பூரில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் M.ஜஹீருஸ் ஜமா, P.M.ஷபீவுல்லாஹ், S.M.ஷானவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசிக்கப்பட்டது. பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர கிளை நிர்வாகத்திற்கு பொதுக்குழு கூட்டம் கூட்டி அமைப்பு தேர்தல் நடத்துவது எனவும், மாவட்டம் முழுவதும் கொடி ஏற்றுவது எனவும், மஜகவின் உறுப்பினர் சேர்க்கை செயலியில் (ஆப்சில்) விரைவாக உறுப்பினர் சேர்ப்பது எனவும், மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம் 08.10.17
காயல்பட்டிணம் மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!
தூத்துக்குடி.அக்.08., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டிணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் பைபாஸ் ரோட்டில் வைத்து நகர செயலாளர் S.M.ஜிபுரி தலைமையில் நடைப்பெற்றது. இதில மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், நகர பொருளாளர் மீரான், நகர துணை செயலாளர் ஜியாவுதீன், நகர மருத்துவ சேவை அனி செயலாளர் சுல்தான், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் சதாம் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 15 வது வார்டுக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான மங்கள விநாயகர் கோவில் தெரு, உச்சிமகாளி அம்மன் கோவில் தெரு, பைபாஸ் ரோடு பகுதிகளை சேர்ந்த 400 க்கும் அதிகமானோர் நிலவேம்பு குடிநீர் அருந்தி பயணடைந்தனர். அதே போல் 6 வது வார்டுக்குட்பட்ட சித்தன் தெரு பகுதியிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம் 08.10.2017