தூத்துக்குடி.அக்.08., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டிணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் பைபாஸ் ரோட்டில் வைத்து நகர செயலாளர் S.M.ஜிபுரி தலைமையில் நடைப்பெற்றது.
இதில மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், நகர பொருளாளர் மீரான், நகர துணை செயலாளர் ஜியாவுதீன், நகர மருத்துவ சேவை அனி செயலாளர் சுல்தான், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் சதாம் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் 15 வது வார்டுக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான மங்கள விநாயகர் கோவில் தெரு, உச்சிமகாளி அம்மன் கோவில் தெரு, பைபாஸ் ரோடு பகுதிகளை சேர்ந்த 400 க்கும் அதிகமானோர் நிலவேம்பு குடிநீர் அருந்தி பயணடைந்தனர்.
அதே போல் 6 வது வார்டுக்குட்பட்ட சித்தன் தெரு பகுதியிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்
08.10.2017