மார்ச் 20,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தனி உதவியாளர் விமல்ராஜ் அவர்களின் திருமணம் இன்று தோப்புத்துறை அருகே செம்போடையில் நடைபெற்றது.
மணமகன் விமல்ராஜ் BE,MBA, மணமகள் சத்யா MSc ஆகியோரின் திருமணத்தில் இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சென்று வாழ்த்தி அனைத்து நிகழ்விலும் பங்கேற்றார்.
அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் அவர்களும் நேரில் சென்று வாழ்த்தினார்.
மாவட்டம் முழுவதிலிருந்தும் மஜக-வினர் சகோதர உணர்வுடன் வருகை தந்து வாழ்த்தினர்.
ரமலான் நோன்பு காரணமாக வர இயலாத மஜக-வினர் சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்துககளை தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், மாணவர் இந்தியா தஞ்சை மண்டல செயலாளர் நிசாத், அவைத் தலைவர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் ஆம்ஸ்(எ) அஹமதுல்லா, பேபி ஷாப் பகுருதீன், பாலமுரளி, திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன்,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் வேதை தோப்புத்துறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_மாவட்டம்
20.03.2024.