ஆதிதிராவிட சமுதாயம் மற்றும் பழங்குடியின சமுதாய மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் திரும்ப செலுத்த அனைத்து கல்வி கட்டணங்களையும் அரசே வழங்கும் என அரசாணை எண் 6 மற்றும் 92 சொல்கிறது.
இதனை கலை அறிவியல் கல்லூரிகள் முழுமையாக பின்பற்றவில்லை. ஆனால் பொறியியல் கல்லூரிகள் நடைமுறைப்படுத்தி வந்தன.
இது குறித்து நீதியரசர் N.V. பாலசுப்ரமணியம் குழு வடிவமைத்த கட்டணத் தொகை பட்டியலின் மாணவ-மாணவிகளுக்கு கிடைத்ததால் அதில் 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொறியியல் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது.
தற்போது நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் ஆதிதிராவிட, பழங்குடியின, மதம் மாறிய கிருஸ்துவ மாணவ, மாணவிகளின் உதவித்தொகையை தமிழக அரசு குறைத்து அரசாணையை வெளியிட்டுருக்கிறது.
இதனால், இதுவரை பலனடைந்துள்ள மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர்.
பலரின் படிப்பு பாதியிலேயே நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தமிழக அரசு இந்த அரசாணையை ரத்து செய்து, பழைய நிலை தொடர ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
#A_முஹம்மது_அஸாருதீன்,
#மாநில_செயலாளர்,
#மாணவர்_இந்தியா