திருவாரூர்.அக்.11., திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுக்க எடையூர்-சங்கந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடத்திய டெங்கு விழிப்புணர் பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம். மஜக கிளை செயலாளர் தமிம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. கிளை பொருளாளர் தவுலத் பாட்சா, ஹமீது நபில், கலீல் ஜிப்ரான், நாச்சிகுளம் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை ஏற்றனர் இம்முகாமில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு டெங்கு பற்றிய விழிப்புணர்வு விளக்க பிரச்சாரம் செய்து நிலவேம்பு கசாயம் கொடுத்து முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் சங்கந்தி அரசு பள்ளி மாணவர்களும் கிராம பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அந்த வழியே வாகனத்தில் சென்ற பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஆர்வமாக வந்து நிலவேம்பு கசாயம் அருந்தி சென்றார்கள் என்பது குறிப்பிட தக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #எடையூர்_சங்கந்தி #திருவாரூர்_மாவட்டம் 11.10.17
Author: admin
பொதக்குடி மஜக சார்பில் நான்காவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..
திருவாரூர்.அக்.11., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நான்காவது நாளாக பொதக்குடி மஜக கிளை அலுவலகத்தில் பொது மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலமேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK _IT_WING #திருவாரூர்_மாவட்டம் 11/10/2017
கோவையில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க நிர்வாகக் குழுகூட்டம்..!
கோவை.அக்.10., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) நிர்வாகக் கூட்டம் மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் சுதீர், மக்கான் ஜாபர் ஆகியோர் கலந்துகொண்டனர், இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. 1. மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தை கோவை மாவட்ட அனைத்து கட்சி தொழிற் சங்க கூட்டு கமிட்டியில் இணைப்பது என தீர்மானிக்கப்பட்டது, 2.தொழிற் சங்கத்தின் பகுதி மற்றும் கிளை நிர்வாகிகளை சந்தித்து தொழிற் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிப்பது என தீர்மானிக்கப்பட்டது, 4. 24/09/2017 அன்று கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுகூட்டத்தை நடத்திய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 10.10.17
சூப்பர் நேஷன் பார்டியை சார்ந்த சகோதரர்கள் மஜகவில் இணைந்தனர்.
வேலூர்.அக்.10,.மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டம் நிர்வாகத்தை சீரமைத்து சில தினங்கள் முன்பு புதிய பொருப்பாளர்கள் நியமனம் செய்து மாவட்ட பொறுப்பு குழு அமைக்கப்பட்டது. பொறுப்புக்குழு உறுப்பினர் ஆம்பூர் M.ஜஹீருஸ் ஜமா தலைமையில் ஆம்பூர் நகர நிர்வாகிகள் நகரம் முழுவதும் கிளைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சூப்பர் நேஷன் பார்டியை சார்ந்த சகோதரர் நபீஸ் தலைமையில் சில சகோதரர்கள் உறுப்பினர் படிவத்தை நிரப்பி தன்னேழுச்சியாக மஜகவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் SMD.நவாஸ், S.M.,ஷாநவாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம்
கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது! தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA, தனியரசு MLA வேண்டுகோள்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA வெளியிடும் கூட்டறிக்கை) கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 20 மீட்டர் அகலத்திற்கு எரிவாயு குழாய் பதிக்க இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம் (கெயில்) மத்திய அரசிடம் அனுமதி பெற்றது. விவசாய நிலங்களை பாதிக்கும் இத்திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்கள். தமிழக அரசின் சார்பில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறு சீராய்வு மனு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இத்திட்டத்தை பசுமை கொழிக்கும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அமல்படுத்த முனைவது கண்டனத்திற்குரியது. விவசாய நிலங்களை பாழ்படுத்துவதை அனுமதிக்க முடியது. கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்களின் வழியேத்தான் எரிவாயு குழாய்கள் பதிப்போம் என அடம் பிடிப்பதை ஏற்கவே முடியாது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக மட்டுமே