You are here

எடையூர்-சங்கந்தியில் மஜகவின் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

image

image

திருவாரூர்.அக்.11., திருவாரூர் மாவட்டம்  திருத்துறைபூண்டி தாலுக்க எடையூர்-சங்கந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடத்திய டெங்கு விழிப்புணர் பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம். மஜக கிளை செயலாளர் தமிம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. கிளை பொருளாளர் தவுலத் பாட்சா, ஹமீது நபில், கலீல் ஜிப்ரான், நாச்சிகுளம் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்

  இம்முகாமில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு டெங்கு பற்றிய விழிப்புணர்வு விளக்க பிரச்சாரம் செய்து நிலவேம்பு கசாயம் கொடுத்து முகாமை துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் சங்கந்தி அரசு பள்ளி மாணவர்களும் கிராம பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அந்த வழியே வாகனத்தில் சென்ற பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஆர்வமாக வந்து நிலவேம்பு கசாயம் அருந்தி சென்றார்கள் என்பது குறிப்பிட தக்கது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#எடையூர்_சங்கந்தி
#திருவாரூர்_மாவட்டம்
11.10.17

Top