கோவை.டிச.20., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட வெள்ளலூர் கிளை நிர்வாக கூட்டம் கிளை செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பகுதி செயலாளர் காதர், துணைசெயலாளர் அபு மற்றும் வெள்ளலூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) வெள்ளலூர் குடியிருப்பு மக்களின் அவசர மருத்துவ வசதிக்காக அரசு அதிகாரிகளிடம் பேசி 108 அவரசர ஊர்தி குடியிருப்பு பகுதியில் நிரந்தரமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது. 2) அதிகப்படியான மஜக உறுப்பினர்கள் சேர்ப்பு நிகழ்ச்சியை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 20.12.17
Author: admin
தமுமுகவின் கத்தார் அமைப்பான IQIC லிருந்து மஜகவில் இணைந்தனர் !!
கத்தார்.டிச.19., கத்தார் மண்டலத்தில் தமுமுகவின் கிளை அமைப்பு IQIC என்ற பெயரில் இயங்கி வந்தது. இதில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றிய சகோதர் முன்னாள் மக்கள் தொடர்பாளர், முன்னாள் செயற்குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ் தலைமையில் 20 சகோதர்களுடன் இன்று மஜக மாநில அவைத் தலைவர் நாசிர் உமரி அவர்கள் முன்னிலையில் மஜகவின் கிளை அமைப்பான கத்தார் மனிதநேய கலாச்சாரப் பேரவையில் இணைந்தார்கள். தகவல்; #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #MKP_கத்தார்_மண்டலம் 19.12.2017.
மஜக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாக ஆலோசனை கூட்டம்..! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
குடந்தை.டிச.19., மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் கடந்த (17.12.2017) அன்று மாலை 6:30 மணியளவில் கும்பகோணத்தில் அணியின் மாநில செயலாளர் A.M.ஹாரிஸ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பார்களாக மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா மற்றும் மாநில செயலாளர் H.ராசுதீன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர்கள் வானவில் காதர், சிக்கந்தர் பாட்ஷா, திருச்சி சேட் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் இக்கூட்டத்தில் அணியின் வளர்ச்சிகள் சம்பந்தமாக பல்வேறுவித ஆரோக்கியமான ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை 17.12.2017.
ஆம்பூர் நகர பூந்தோட்ட பகுதி இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர்.
வேலூர்.டிச., 19,. ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜஹிருஸ் ஜமா முன்னிலையில் ஆம்பூர் நகர 22-வது வார்டு பூந்தோட்ட பகுதியை சேர்ந்த சகோதர் முனீர் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந் நிகழ்வில் TR முன்னா (எ) நஸிர் நகர செயலாளர் பிர்தோஸ் அஹமத், மற்றும் நகர துணைச் செயலாளர்கள் அமிர் பாஷா, அஷ்பாக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ரபத்துல்லா இம்ரான் அஹம்த், ஷாயின்ஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 18.12.2017
மஜக நாகை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்..!
நாகை. டிச.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் ,மாவட்ட பொருளாளர் பரக்கத்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ் , மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தீன், ஹமீது ஜெஹபர் மாவட்ட அணி செயலாளர்கள் அப்துல் அஜீஸ் , சாகுல் ஹமீது, பிஸ்மி யூசுப், தெத்தி ஆரிப், அல்லா பிச்சை, ரெக்ஸ் சுல்தான், அப்துல் ரஹ்மான் , ஜலாலுதீன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சபுர்தீன், முஜீபுர் ரஹ்மான், நகர செயலாளர்கள் சாகுல் ஹமீது ,இஸ்மாயில், நகர பொருளாளர்கள் அஜீ ஜுர் ரஹ்மான் , இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர். தீர்மானம்: வருகின்ற பிப்ரவரி 28 கட்சியின் 3-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாகையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், அதில் தலைமை நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்களை அழைப்பது என்றும் திர்மானம் நிறைவேற்றபட்டது. இறுதியில் மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி நன்றி கூறினார் தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 18.12.17