மஜக கோவை வெள்ளலூர் கிளை நிர்வாகக் கூட்டம்!

image

image

கோவை.டிச.20., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட வெள்ளலூர் கிளை நிர்வாக கூட்டம் கிளை செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பகுதி செயலாளர் காதர், துணைசெயலாளர் அபு மற்றும் வெள்ளலூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) வெள்ளலூர் குடியிருப்பு மக்களின் அவசர மருத்துவ வசதிக்காக அரசு அதிகாரிகளிடம் பேசி 108 அவரசர ஊர்தி குடியிருப்பு பகுதியில் நிரந்தரமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

2) அதிகப்படியான மஜக உறுப்பினர்கள் சேர்ப்பு நிகழ்ச்சியை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
20.12.17