#மஜக_மாநில_பொருளாளர்_எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது_பங்கேற்பு..!! சென்னை.ஜூன்.06., மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் குறித்தான நினைவேந்தல் நிகழ்ச்சி, காணொளி காட்சி மூலமாக (Zoom) விசிக தலைவர் தொல்.திருமாவளவன் MP அவர்கள் தலைமையில் கடந்த (04.06.2021) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு மறைந்த முஹம்மது யூசுப் அவர்களின் நினைவுகள் மற்றும் மஜக-விற்கும் அவருக்குமான தோழமையை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் விசிக தொண்டர்கள் நேரலை மூலமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 04.06.2021
Tag: எஸ்எஸ்ஹாரூன்
கொரோனா ஒழிந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்போம்!!
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ரமலான் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி!! உலகின் மற்றுமொரு திருநாளாக 'ஈதுல் பித்ர்' எனும் நோன்புப் பெருநாள் மலர்ந்திருக்கிறது. உலகப் பொதுமறையான திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமலான் மாதத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டாக 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் நிறைவாக உலகமெங்கும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இப் பெருநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள். பசியின் கொடுமையை உணரும் வகையிலும்;பிறர் பசியை போக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை பெறும் வகையிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் இறை வழிபாட்டோடு நகரும் இந்த நாட்கள் உணர்வுபூர்வமானவை! நிறைவாக பெருநாளை கொண்டாடி மகிழ வான்பிறையை எதிர்நோக்கும் நிமிடங்கள் அழகானவை! ஆனால் அந்த உற்சாகத்தை வழக்கம் போல கொண்டாட முடியாத சூழலில் நாம் இருக்கி றோம். கொரணா பெருந்தொற்றின் காரணமாக குடும்பத்தினரோடும், பல் சமூக நண்பர்களோடும் இப்பெருநாளை கொண்டாடி மகிழும் நிலையில் தற்போதைய சூழல் இல்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும். சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் பரவுகின்ற நிலையில்; அவரவர் இல்லங்களிலேயே தொழுது விட்டு மகிழ்ச்சியினை கட்டுப்பாட்டோடு வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம்
மஜக தலைமையகத்திற்கு தி.வேல்முருகன் MLA வருகை.!
சென்னை.மே.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA., அவர்கள் இன்று வருகை தந்து. பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார். அப்போது பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் உடனிருந்தனர். தனது வெற்றிக்கு மஜக-வினர் தீவிரமாக களப்பணியாற்றிதை குறிப்பிட்டு, அவர்களது உழைப்பு மறக்க முடியாதது என்றார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 05.05.2021
இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் எஸ்எஸ்ஹாரூன்ரசீது கண்டன உரை
தஞ்சாவூர்., ஜன. 29 குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி பாபநாசம் வட்டார அனைத்து இஸ்லாமிய மஹல்லா ஜமாஅத் & இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புகள் சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், மேலவீதி, அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 27.01.2020 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசிது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மஜக மாநில வர்த்தக அணிச் செயலாளர் யூசுப் ராஜா, மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் ஏ.காதர்பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் அ.முஹம்மது மஃரூப், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் எல்.முஹம்மது இப்ராஹிம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அ.அஷ்ரப் அலி மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சாவூர்வடக்குமாவட்டம் 27-01-2020
கானத்தூரில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் CAAஎதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!! : எஸ்எஸ்ஹாரூன் ரசீது கண்டனஉரை
கானத்துர்.ஜனவரி.03.., பாஜக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் அமைதி வழியில் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் இயக்கங்கள், தமிழ்தேசிய அமைப்புகள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (03-01 2020) செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூரில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது M.Com., கலந்து கொண்டு CAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். மேலும், தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சு.க.விடுதலைச் செழியன், விசிக மாவட்டச் செயலாளர் சு.ரா.ராஜ்குமார், திமுக கானத்தூர் ஊராட்சி செயலாளர் M.சௌந்திரபாண்டியன், SDPI மாநில பேச்சாளர் கிண்டி அன்சாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக பள்ளியின் மெளலான A சிராஜுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் மஜக மாவட்டப் பொறுப்புக்குழு தலைவர் கல்பாக்கம் ரஷீத், மாவட்டப் பொறுப்பு குழு உறுப்பினர்கள் சர்தார், கானத்துர் தீன், கானத்துர்