கானத்துர்.ஜனவரி.03..,
பாஜக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் அமைதி வழியில் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் இயக்கங்கள், தமிழ்தேசிய அமைப்புகள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று (03-01 2020) செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூரில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது M.Com., கலந்து கொண்டு CAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
மேலும், தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சு.க.விடுதலைச் செழியன், விசிக மாவட்டச் செயலாளர் சு.ரா.ராஜ்குமார், திமுக கானத்தூர் ஊராட்சி செயலாளர் M.சௌந்திரபாண்டியன், SDPI மாநில பேச்சாளர் கிண்டி அன்சாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக பள்ளியின் மெளலான A சிராஜுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் மஜக மாவட்டப் பொறுப்புக்குழு தலைவர்
கல்பாக்கம் ரஷீத், மாவட்டப் பொறுப்பு குழு உறுப்பினர்கள் சர்தார், கானத்துர் தீன், கானத்துர் சமியுல்லா, கானத்துர் ஒன்றியச் செயலாளர் நயினார் முஹம்மது, மற்றும் கிளை, வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பெருந்திரளான மஜக-வினர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கல்பட்டு_மாவட்டம்
03.01.2020