கேரளஅரசு போல் தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் : தமிழக முதல்வருக்கு முதமிமுன்அன்சாரி MLA கடிதம்

தமிழக முதல்வர் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் மஜக சார்பில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் CAA, NRC, NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து மக்களின் தன்னெழுச்சி அறப்போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்.

தமிழகத்தில் சாதி, மதங்கள், அரசியல் பேதங்களை கடந்து மக்கள் இச்சட்டங்களுக்கு எதிராக போராடி வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.

மே.வங்கம், பீஹார், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள் இச்சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்து விட்டன.

கேரள அரசு சட்டமன்றத்தை கூட்டி, குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

எனவே, அதே வழியில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, தாங்கள் தமிழக சட்டமன்றத்தில் அத்தகைய தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி

02.01.2020

Top