ஜனவரி.03,
இன்று திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கூட்டமைப்பு சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதி அளவிளான கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அப்போது பேசியதாவது ..
NRC சட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு என்றதும் கொல்லைப்புறம் வழியாக அதன் கேள்விகளை NPR சட்டம் மூலம் கொண்டு வர மத்திய அரசு வஞ்சகமாக திட்டமிடுகிறது.
வழக்கமாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை வரவேற்கிறோம்.
ஆனால் NPR சட்டம் என்பது இதிலிருந்து மாறுபட்டது. அது வேறு இது வேறு.
NPR சட்டத்தை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது என்று கூறி தப்பிக்க பார்க்கிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா? காங்கிரஸ் கொண்டு வந்த NPR ல் 15 கேள்விகள் மட்டுமே இருந்தன.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த NPR சட்டத்தில் கூடுதலாக 6 கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த 6 கேள்விகள் என்பது அஸ்ஸாமில் அமல்படுத்தப்பட்ட NRC சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளாகும்.
பாட்டன், பூட்டனின் பிறந்த ஆவணத்தை எங்கு தேடுவது?
1970 களுக்கு பின்னால் தானே, பிறந்த தேதி ஆவணங்கள் முறையாக பதிவாகின. அதற்கு முன்னால் பிறந்தவர்களுக்கு, பெரும்பாலும் ஆவணங்கள் இல்லையே..
அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அகதி முகாம்களுக்கு செல்ல வேண்டும். மற்றவர்கள் CAA குடியுரிமை திருத்த சட்டம் மூலம் தப்பித்து விடுவார்கள்.
இது அநீதி அல்லவா?
எனவே தான் இதை எதிர்த்து போராடுகிறோம். தொடர்ந்து போராடுவோம். இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடிக் கொண்டே இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் திரள் காரணமாக திருத்துறைப்பூண்டி – நாகப்பட்டினம் சாலை மூடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் அவர்கள் உட்பட திரளான மஜகவினரும் பல்வேறு சமூகங்களை சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்றனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.