ஜனவரி.3..,
இன்று தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில், மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஜமாத்தினர் இதற்கு ஆதரவு அளித்து திரளாக பங்கேற்றனர்.
இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசியதாவது..
பல கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் இருக்கும்போது, நாங்கள் வாழ்வுரிமைக்கான போராட்ட களத்தை நடத்தி வருகிறோம். அதில் கவனம் செலுத்தியதை விட இதில் தான் தீவிரமாக இயங்கி வருகிறோம்.
இது நாட்டை காக்கும் அறப்போராட்டம். இது எங்களுக்கு முக்கியமாக இருக்கிறது.
நாளுக்கு நாள் போராட்ட களம் வீரியமடைகிறது. மக்கள் தன்னெழுச்சியாக திரள்கிறார்கள். மத நல்லிணக்கத்துடன் கூடிய இன்னொரு சுதந்திர போராட்டமாக இது மாறியுள்ளது.
இந்த கறுப்பு சட்டங்களை திரும்ப பெறும் வரை ஓய மாட்டோம். இவை தொடக்கம் தான். இன்னும் முழுமையான போராட்டம் தொடங்கவில்லை.
வட இந்திய ஊடகங்களிடம் போராட்ட காட்சிகளை, செய்திகளை முக்கியப்படுத்த வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளதாம்.
இருட்டடிப்புகளை தாண்டி செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டங்களை மூடி மறைக்க முடியாது.
இந்த போராட்டங்களை சில மூளை வீங்கிகள் கொச்சைப்படுத்தி, தங் களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள்.
போராட்டம் மக்களை நோக்கி செல்கிறது. மக்கள் போராட்டத்தை நோக்கி திரள்கிறார்கள். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள் என ஒற்றுமையாக மத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். இது தான் திருப்புமுனையாக இப்போது நாடெங்கும் பேசப்படுகிறது.
தமிழக அரசு கள நிலவரங்களை கவனிக்க வேண்டும். தமிழகத்தில் இச்சட்டங்களை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். அதிமுக தொண்டர்களின் மன நிலைக்கு எதிராக அவர்களின் தலைமை சென்று கொண்டிருக்கிறது. இது அவர்களுக்குத்தான் தொடர் இழப்பாக அமையும். https://m.facebook.com/story.php?story_fbid=2194755597290870&id=700424783390633
பெரியவர் நெல்லை கண்ணன் பேச்சில் எங்களுக்கு உடன்பாடில்லை. அவர் உள்நோக்கோடு பேசியதாகவும் தெரியவில்லை. நெல்லை தமிழில் காமெடியாக பேசியுள்ளார்.
அவர் பேசியது குற்றமென்றால் மாணவர்களின் மீது குண்டு வீசுவேன் என ஆவேசமாக பேசிய H.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?
பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய SV.சேகரை ஏன் கைது செய்யவில்லை?
மதவெறியை தூண்டி, தமிழர்களை சீண்டி தொடர்ந்து சமூக இணையங்களில் பதிவிடும் கல்யாணராமனை ஏன் கைது செய்யவில்லை?
மக்களின் இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உள்ளுர் மக்கள் மட்டுமே பங்கு பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளான பெண்களும் தேசிய கொடியேந்தி முழக்கங்களை எழுப்பினர்.
பல்வேறு கட்சிகள், அமைப்பினர் என எல்லோரும் வருகை தந்து ஆர்ப்பரித்தனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகைதெற்குமாவட்டம்