மஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி : மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய ஜனநாய கட்சி தனித்து போட்டியிட்டது.

பண விநியோகம், பெரிய கட்சிகளின் அதிகார பலம், நீண்டகால அனுபவம் ஆகியவற்றை கடந்து மஜக-வினர் களமாடினர்.

வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல் கட்சியை மக்களிடம் மேலும் நெருக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் மஜக-வினர் இந்த தேர்தலை எதிர்கொண்டார்கள்.

தொண்டர்களின் அயராத உழைப்பினால் தற்போது ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என மஜக வெற்றிகளை குவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 10 வாக்குகளுக்கும் குறைவான எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்.

4-வயது குழந்தையான மஜக-வின் நேர்மையான அரசியல் அணுகுமுறைகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றி பெற்ற மஜக சொந்தங்களுக்கு வாழ்த்துக்களை கூறும் அதே வேளையில், தனித்து களமாடிய நிலையில் வெற்றி வாய்ப்புகளை இழந்தவர்கள் நம்பிக்கையுடன் அடுத்த களத்துக்கு ஆயத்தமாக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மஜக-வுக்கு மக்கள் அளித்த வாக்குகளையும், மஜக-வுக்கு கிடைத்த வெற்றிகளையும், மஜக-வின் இரத்த ஓட்டங்களாக திகழும் தொண்டர்களுக்கு சமர்பிக்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
04.01.2020

https://m.facebook.com/story.php?story_fbid=2196855853747511&id=700424783390633

Top