கருப்புசட்டங்களுக்கு எதிராக பெரும்பாக்கம் ஜமாத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.., மஜக பங்கேற்பு..!

செங்கை.ஜனவரி.04..,

CAA, NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக அனைத்து கட்சி, இயக்கங்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றினைந்து இந்தியா முழுவதிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஜமாத் சார்பாக OMR சாலையில் நேற்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டத்திற்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் தாம்பரம் ஜாகிர், தில்ஷாத், அப்துல்லாஹ் உட்பட மஜக தொண்டர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பரித்தனர்.

தகவல்;-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கை_வடக்கு
04-01-2020

https://m.facebook.com/story.php?story_fbid=2197293233703773&id=700424783390633

Top