குடியுரிமை சட்டத்திற்கெதிராக கறம்பக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்


ஜன.05,

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கூட்டமைப்பு சார்பில் கறம்பக்குடி பேருநது நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பு தலைவர் அல்ஹாஜ் A.M. கலிபுல்லா தலைமையில் நடைப்பெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

இதில், விஜயரவி பல்லவராயர் Ex.MLA கவிதைபித்தன், சிவ.திருமேணிநாதன், இப்ராஹிம் பாபு, அப்துல் கனி, அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோர் இச்சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பேசினர். அன்பு இப்ராம்ஷா வரவேற்க அப்துல்ரஷீது நன்றி கூறினார்.

பல்வேறு அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள், சமூகநீதி அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் நிர்வாகிகளும், பொதுமக்களும் இப்போராட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2198595693573527&id=700424783390633

Top