12ஆம் வகுப்பு வெற்றியாளர்களுக்கு மஜகவின் வாழ்த்துக்கள் .!

இவ்வாண்டு +2 தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

போட்டிகளும் , நெருக்கடிகளும் நிறைந்த நவீன உலகில் , உங்களின் எதிர்காலத்திற்கும் , இயற்கை அறிவிற்கும் ஏற்ற உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் கூரிய கவனம் செலுத்த வேண்டும் . வசந்த காலத்தின் வண்ணப் பறவைகளாய் சிறகு விரிக்க தயாராகுங்கள் .

இத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் , நம்பிக்கையை இழக்காமல் உத்வேகத்துடன் அடுத்த முயற்சியில் ஈடுபடுங்கள் .

விழுவது வீழ்வதற்கல்ல ….
எழுவதற்கே என்பதை எண்ணி மன உறுதியோடு புறப்படுங்கள் .

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..!

அன்புடன்

M. தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
18-05-2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*