பேராவூரணி.ஜூலை.24., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் அமைய இருந்த டாஸ்மாக் மதுக்கடையை கண்டித்து #மதுக்கடை_எதிர்ப்பு_போராட்ட_குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் தலைமையில் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தோழர்.திலீபன், த.ம.பு.க. கொள்கை பரப்பு செயலாளர் தோழர் ஆறு.நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
இதில் மஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜ் முகம்மது, திமுக, அமமுக, மதிமுக, காங்கிரஸ், மாதர் சங்கம், சிபிஐ, சிபிஎம், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் பொது நல அமைப்புகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம்
23.07.2018