கறுப்புசட்டங்களுக்கு எதிராக புலிப்படை நிற்கும்! இராமநாதபுரத்தில் கருணாஸ் உறுமல்!

ஜனவரி 03,

இராமநாதபுரத்தில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் மஜக சார்பில் மாவட்ட செயலாளர் இலியால் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் கறுப்பு சட்டங்களை கடுமையாக சாடி தனக்கே உரிய பாணியில் பேசினார்.

அது போல் நாஞ்சில் சம்பத் அவர்கள் பேசும் போது மோடி – அமித் ஷா கூட்டணியின் வஞ்சகங்களை தோலுரித்தார்.

இதில் முக்குலத்து புலிப் படை தலைவர் கருணாஸ் MLA அவர்கள் பங்கேற்று, 45 நிமிடங்கள் அனல் பறக்க பேசினார்.

கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்றவர், இப்போராட்டத்திற்கு புலிப் படை என்றும் துணை நிற்கும் என்றதும் கூட்டம் ஆராவரித்தது.

பசும்பொன் தேவர் உங்களோடு உறவு பாராட்டியது போல நானும் உங்களோடு நிற்பேன் என்றதும் கூட்டம் முழக்கங்களை எழுப்பி அதை உற்சாகமாக வரவேற்றது.

இக்கூட்டத்திற்கு தேவர் சமுதாய மக்கள் திரண்டு வந்து வலு சேர்ந்தனர். முக்குலத்தோர் புலிப் படையினர் ஏராளமான வாகனங்களில் அணிவகுத்து வந்தனர்.

இந்நிகழ்வில் நவாஸ் கனி MP, இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஆலம், உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

இது பல இன மக்களையும், பல தரப்பினரையும் கைக்குலுக்க செய்யும் நல்லிணக்க நிகழ்வாகவும் மாறியது ஒரு திருப்பு முனையாகும்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#இராமநாதபுரம்_மாவட்டம்.