You are here

​முதலமைச்சரின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி! நாகை MLA பங்கேற்பு!

நாகை. மார்ச்.18.,நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் தமிழக கைத்தறி துணிநூல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் 

O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர்  

M. தமிமுன் அன்சாரி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், திருமருகல் ஒன்றியங்களை சேர்ந்த 178 பெண்களுக்கு ரூ.86 லட்சத்து 63 ஆயிரத்து 936 மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
தகவல் : 
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.

18.03.2017

Top