ஆக.18.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் தலைமையில் மக்கள் நல கோரிக்கைகளுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது..
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து தாலுக்காவிலும் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் கணினிகள் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் பற்றாக்குறையால் ஆதார் உள்ளிட்ட தேவைகளுக்காக வரும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள் அதை சரி செய்ய வேண்டும் எனவும்.
மேலும் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள் மேலும் அங்கு சுகாதார சீர்கேடுகள் இருப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது அதை சரி செய்ய வேண்டும் எனவும், ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து மின் கம்பங்களும் அபாயகரமான நிலையில் உள்ளதால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்குமாறும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கட்சியின் பேச்சாளர் இனாயத்துல்லா, இக்பால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#விருதுநகர்_மாவட்டம்
17.08.2020