ஞானதேசிகன் மறைவு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!


முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ் மாநில காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான திரு.ஞானதேசிகன் அவர்கள் இன்று மரணமடைந்த செய்தியறிந்து வேதனையடைந்தோம்.

ஐயா. மூப்பனார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அரசியல் தலைவர் அவர்.

மதிப்புமிக்க அரசியலாளர்களில் ஒருவராக பயணித்தவர்.

சிறந்த நாடாளுமன்றவாதியாக தன்னை நிருபித்த அவர், புள்ளி விபரங்களோடு பேசக் கூடியவராகவும், பண்பாளராகவும் தமிழக அரசியலில் வலம் வந்தார்.

அவரை இழந்து வாடும் அண்ணன் GK வாசன் உள்ளிட்ட தமாகா வினருக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
15.01.2021