75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் அதிராம்பட்டினம் MJTS ஆட்டோ நிறுத்தத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் அதிரை மஜக நகர செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மஜக நகர நிர்வாகிகள் மற்றும் MJTS ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
Tag: MJK Party
75வது சுதந்திர தின விழா! விருது நகரில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேசன் ராஜா, ராஜபாளையம் நகர செயலாளர் சம்சுதீன், மற்றும் மாவட்ட ஒன்றிய, பகுதி, கழக, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 15.08.2021
காட்டுமன்னார்கோயிலில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!
75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காட்டுமன்னார்கோயில், ரம்ஜான் தைக்காலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹூசைன் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தேசிய கொடிகளுடன் முக கவசங்கள் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன், கிளை செயலாளர் ரிபாயத்துல்லா, கிளை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வருகை!
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் இல்லத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் வருகை புரிந்தார். தேர்தலில் திமுக வெற்றிக்காக சிறப்பாக பணியாற்றிய திருச்சி மாவட்ட மஜக-விற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் சமீபத்தில் திருமணம் முடித்த மாவட்டச் செயலாளர் மைதீன் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். பின்னர் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களிடமும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் அவர்கள் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், துணைச் செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, முஹம்மது பீர்சா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 20.07.2021
அடையார் கேன்சர் இன்ஸ்டியூடிற்கு மஜக நன்கொடை..!
மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது நேரில் வழங்கினார்.!! சென்னை.ஜூன்.23., சென்னை அடையாரில் செயல்பட்டு வரும் கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு மருத்துவ தேவைக்காக தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் வருகை தருகிறார்கள். கேன்சர் இன்ஸ்டியூடின் அடிப்படை தேவைகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நன்கொடை வழங்க நேற்று (22.06.2021) மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேரில் சென்று முதல்கட்டமாக காசோலை மூலமாக நன்கொடையை மருத்துவமனையின் டைரக்டர் சாகர் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் பசீர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 22.06.2021