அதிரையில் மஜக ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா!

75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் அதிராம்பட்டினம் MJTS ஆட்டோ நிறுத்தத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இதில் அதிரை மஜக நகர செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மஜக நகர நிர்வாகிகள் மற்றும் MJTS ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.