இளையான்குடியில் MJTS அலுவலகம் திறப்பு விழா..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது திறந்து வைத்தார்..!!


நவ.10.,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) பஸ் ஸ்டாண்ட் கிளை அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நகர செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிழ்ச்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் ஐ.என்.பி. ஜமாத் தலைவர் நாடா அன்வர் சதாத், முருகன் கிளினிக் நிறுவனர் டாக்டர்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 16 வார்டு கிளை செயலாளர் முத்து முஹம்மது ஹவுத், 17 வார்டு கிளை செயலாளர் அபூபக்கர், 16 வார்டு கிளை பொருளாளர் தஸ்லிம், 8 வார்டு கிளை சலீம், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஜூம்மா கான், கமர், அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்.
09.11.2020