You are here

ஆர்.கே. நகர் இடைதேர்தல் மஜக நிர்வாகிகள் ஆலோசனை

image

image

சென்னை.மார்ச்.29., ஆர்.கே. நகர் இடைதேர்தல் எதிர் வரும் ஏப்ரல் 12 அன்று நடைபெறவிருக்கிறது.

இத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்  செய்ய வேண்டிய பிரச்சாரப் பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது M.com அவர்கள் தலைமை தாங்கினார்.

வட சென்னை, தென் சென்னை,  மத்திய சென்னை, திருவள்ளுர் கிழக்கு, திருவள்ளுர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்ட முடிவில் அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு TTV.தினகரன் அவர்களை வெற்றிபெற வைக்க மஜக தொண்டர்கள் திட்டமிட்டு தீவிரமாக பணியாற்ற வேண்டும் என முடிவெடுக்கபட்டது.

தகவல் : தேர்தல் பணிக்குழு,
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி.
29.03.2017

Top