நாகை தொகுதிக்கு தடுப்பணை தேவை .! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…

image

கடந்த 22.03.2017 அன்று சட்டசபையில் நாகப்பட்டினம் தொகுதிக்கு தடுப்பணை கேட்டு M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு .

(பகுதி -11)

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே …

எனது தொகுதியில் காவிரியின் உப ஆறான வெட்டாறு ஓடுகிறது . மழை காலங்களில் நதிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதன் குறுக்கே உத்தமசோழபுரம் / நரிமணம் அருகே தடுப்பணை ஒன்றை கட்டினால் நதிநீர் சேமிக்கப்படும் . இதனால் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும் . 45 வருவாய் கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும் . எனவே இக்கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் .

இவ்வாறு நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார் .

நாகை மக்களின் நீண்டகால கோரிக்கை இப்போது சட்டசபையில் எதிரொலித்துள்ளது.

இத்திட்டம் நிறைவேறினால் , இதில் மிஞ்சும் தண்ணீரை பனங்குடி ஏரியில் சேமித்து , அதிலிருந்து கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் . மேலும் இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் , காரிய அமிலம் பாதுகாக்கப்பட்டு மண்ணின் வளமும் பாதுகாக்கப்படும் . இப்பகுதியில் ONGC நிறுவனம் ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுத்து வருகிறது . இத்திட்டம் நிறைவேறினால் , நிலத்தடி நீரை உறிஞ்சாமல் , தடுப்பணை தண்ணீரையே ONGC நிறுவனமும் பயன்படுத்த முடியும் .

நாகை தொகுதியின் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு  நிரந்தர தீர்வை தரும் இத்திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

நாகை தொகுதியின் நீண்டநாள் கோரிக்கையை சட்டசபையில் எழுப்பி அதற்கான முன் முயற்சியை எடுத்ததற்காக ,விவசாய சங்கங்களும் , விவசாய பிரதிநிதிகளும் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் .

தகவல் :

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
30.03.2017