மத்திய அரசு விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!

image

(மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA
வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

தமிழ்நாட்டுக்கு வறட்சி நிவாரண நிதியை உடனடியாக உயர்த்தி வழங்க கோரியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த தடைசெய்ய வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக தலைநகர் டெல்லியில்
தோழர். அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தமிழ்நாட்டை கடந்தும், இந்தியாவெங்கும் கூர்ந்து கவனிக்ககூடிய போராட்டமாக இப்போராட்டம் மாறியிருக்கிறது. விவசாயிகளின் விசயத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

இதன் எதிரொலியாக தமிழகமெங்கும் விவசாயிகளிடம் கோப அலைகள் பறவி கொண்டிருக்கின்றன.

இவர்களை அலட்சியம் செய்யாமல், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

இவண்,

M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
29.03.17.