மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முதலமைச்சரிடம் நேரில் கோரிக்கை.! இன்று மஜக பொதுச் செயலாளரும் , நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களை , மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் இஃப்தார் விருந்து தொடர்பாக அழைத்து பேசினார் . அப்போது மாடு விற்பனை குறித்தும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் அது தொடர்பாகவும், அது தொடர்பாக விவசாயிகளின் சிரமங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். பிறகு நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இவற்றை குறித்து கொண்ட முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார் . தகவல: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 21.06.2017
செய்திகள்
நாகை தாமரைக்குளம் சீரமைக்கப்படும்! அமைச்சர் MLAவுக்கு உறுதிமொழி!
இன்று சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை மானியம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பினார். "நாகப்பட்டினத்தில் மழையால் இடிந்து விழுந்த தாமரைக்குளத்தின் கரைகளை சீரமைத்துத் தர 2.75 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை இந்த அரசு செய்து தருமா? " என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் உறுதி அளித்தார். நாகை மக்களின் முக்கிய கோரிக்கையான இது MLA அவர்களின் துரித முயற்சியால் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 21.06.2017
பரங்கிப்பேட்டையில் மஜகவின் புதிய கிளை உதயம்…!
கடலூர்.ஜூன்.21., நேற்று கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை உதயமானது. இதில் மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் படியியல் மஜக தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. கடலூர் தெற்கு மாவட்டம். #MJK_IT_WING 20.06.2017
முத்துப்பேட்டையில் மஜகவின் இஃப்தார் நிகழ்ச்சி! சகோதர சமுதாயத்தவர்கள் பங்கேற்பு!!
திருவாரூர்.ஜூன்.21., நேற்று 20/06/2017 செவ்வாய் கிழமை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் தக்பீர் நெய்ணா முஹம்மது அவர்கள் தலைமையில் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ் இலக்கிய பேரவை, பத்திரிக்கையாளர் சங்கம், அரிமா சங்கங்களின் பிரதிநிதிகளும், அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தமாகா அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், மற்றும் முத்துப்பேட்டை ஜமாத் மஹல்லா நிர்வாகிகளும், இளைஞர்களும், சகோதர சமுதாய நண்பர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மஜக நகர துணை செயலாளர் நாஸர் அவர்கள் தலைமையிலான குழு சிறப்பாக செய்திருந்தது. நகர மஜகவின் அழைப்பை ஏற்று வருகை தந்த அணைவருக்கும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன் அவர்கள் நன்றி கூறினார். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING முத்துப்பேட்டை நகரம். 20/06/2017
அல் அய்னில் MKP புதிய கிளை துவக்கம்…
யூ.ஏ.இ.ஜூன்.20., இன்று அல் அய்ன் மண்டலத்திற்குட்பட்ட மரக்கானியாவில் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமீரக ஆலோசகர் J.சேக்தாவுது, அல் அய்ன் மண்டல செயலாளர் S.முகம்மது இம்ரான், பொருளாளர் பூதமங்களம் ஜாகிர் உசேன், துணை செயலாளர் இலந்தங்குடி M.யூசுப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். மண்டல துணை செயலாளர் அறந்தாங்கி அப்துல்லா அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை செய்திருந்தார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய கலாச்சார பேரவை. ஐக்கிய அரபு அமீரகம். #MKP_IT_WING 20.06.2017