இன்று சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை மானியம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பினார். “நாகப்பட்டினத்தில் மழையால் இடிந்து விழுந்த தாமரைக்குளத்தின் கரைகளை சீரமைத்துத் தர 2.75 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை இந்த அரசு செய்து தருமா? ” என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் உறுதி அளித்தார்.
நாகை மக்களின் முக்கிய கோரிக்கையான இது MLA அவர்களின் துரித முயற்சியால் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
21.06.2017