பொள்ளாச்சி.ஜீலை.07., பொள்ளாச்சியில் சுமாா் 100 ஏக்கா் வக்ப் சொத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக சுமாா் 120 பனைமரம், தேக்கு மரம் மற்றும் பலஜாதி மரங்கள் வெட்டப்படுவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. பொள்ளாச்சி நகரசெயலாளர் ஜெமீஷா தலைமையில் அவ்விடத்தில் அதிரடியாக மஜக நிா்வாகிகள் மற்றும் ஐக்கிய ஜமாத் நிா்வாகிகள் களத்திற்கு சென்று மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தினார்கள் மற்றும் இது சம்பந்தமாக தாசில்தாா், சப் கலெக்டாரிடமும் மனுவும் கொடுக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் நமது சொத்தை மீட்க நமது பயணம் தொடரும் என்று பொள்ளாச்சி நகரசெயலாளர் ஜெமீஷா அவர்கள் தெரிவித்தார். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 07.07.17
செய்திகள்
திரு.முக.ஸ்டாலின் மற்றும் தனபாலுடன் மஜக பொதுச் செயலாளர் சந்திப்பு…!
சென்னை.ஜூலை.06., கண்புரை அறுவை சிகிச்சை செய்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் திரு.முக.ஸ்டாலின் அவர்கள் இன்று அவைக்கு வருகை தந்தார். அவரை முதல்வர் எடப்பாடி அவர்கள் நலம் விசாரித்தார். அதே போல் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் எதிர்க்கட்சி தலைவரின் அறைக்கு சென்று திரு.முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார், அவருடன் தனியரசு MLA அவர்களும் சென்றிருந்தார். கண்ணாடி (Cooling Glass) அணிந்திருந்த அவரைப் பார்த்து இப்போது கண்ணாடி அணிந்தும் இன்னும் அழகாக இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் என தமிமுன் அன்சாரி அவர்கள் குறியதும் திரு.முக.ஸ்டாலின் அவர்கள் சிரித்துவிட்டார். அருகில் இருந்த திமுக MLA க்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிறகு மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சபாநாயகர் அறைக்கு சென்று மருத்துவமனையிலிருந்து திரும்பிய சபாநாயகர் தனபால் அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். "ஓய்வில்லாமல் அவைக்கு வந்துவிட்டிர்களோ... இன்னும் ஓய்வுவெடுத்திருக்கலாமே..." என்று கூறினார். தற்போது நலமாக இருப்பதால் வந்துவிட்டேன் என்றார். தகவல்; தகவல் தொழிநுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சட்டமன்ற வளாக செய்தி குழு சென்னை. 06.07.2017
நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!
சென்னை.ஜூலை.06., நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டமன்றத்தில் "தமிழகத்துக்கு விலக்கு கேட்டு" நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை' என்ற அமைப்பு சார்பில் தோழர்.பிரிண்ஸ் கஜேந்திரபாபு உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார். அதில் CPM சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, திமுக சார்பில் R.S.பாரதி M.P, விசிக சார்பில் தொல்.திருமாவளவன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு MLA, காங்கிரஸ் சார்பில் ஹிதாயத்துல்லாஹ், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ் MLA உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் நாங்கள் மூவரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூறினர். சட்டமன்றத்தில் 'நீட்' தேர்வு குறித்து தான் இரண்டு முறை பேசியதாக தமிமுன் அன்சாரி அங்கு நினைவு கூர்ந்தார். முன்னதாக மேற்கண்ட தலைவர்கள் ஒன்றாக நின்று நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. சென்னை. 06.07.17
புதுச்சேரியில் நடப்பது ஜனநாயகப் படுகொலை! மஜக கடும் கண்டனம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) யூனியன் அந்தஸ்து பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் நடைப்பெற்று வரும் அரசியல் குழப்பங்கள் நாட்டையே அதிர்சியில் ஆழ்த்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக கவர்னர் கிரண்பேடி செய்து வரும் நடவடிக்கைகள் கடும் கண்டணத்திற்குரியதாகும். பச்சையாக சொன்னால் மத்திய அரசின் துணையோடு அரசியல் ரவுடித்தனங்களை அவர் அரங்கேற்றி வருகிறார் என்பதுதான் உண்மையாகும். மத்திய அரசு, இரட்டை தலைமைத்துவத்தை உருவாக்கி ஒரு மாநில அரசின் நிர்வாகத்தை சீர்குலைப்பது என்பது ஜனநாயக படுகொலையாகும். உச்சகட்டமாக அங்கு மத்திய அரசு மூன்று பேரை நியமன உறுப்பினர்களாக மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் அறிவித்ததும், அதற்கு ஆதரவாக கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருப்பதும் புதுச்சேரி மாநில மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆளும் பஜக அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் சர்வாதிகார போக்குகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களின் உரிமைகளையும் அழிக்க நினைப்பது இந்திய அரசியலை சீர்குலைக்கும் போக்கு என்பதில் ஐயமில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடியின் அத்துமீறல்களுக்கு எதிராக அங்குள்ள அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும்,
நூறு ஆண்டுகளுக்கு பிறகு புத்தூர் தாமரை குளம் தூர்வாரும் பணிகள் துவக்கம் ! நாகை MLA பார்வையிட்டார் !
நாகை தொகுதிக்குட்பட்ட புத்தூர் தாமரை குளம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது. இதில் சர்ச்சைகள் இருந்ததை அறிந்த MLA அவர்கள் ஊர் மக்களை அழைத்து சமாதானப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். தற்போது ஊர் மக்கள் ஒத்துழைப்போடு 2 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரும் பணிகள் துவங்கி உள்ளது. 2 ஏக்கர் பரப்பளவுள்ள இக்குளம் நுாற்றாண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுவாதல், மக்கள் MLA வுக்கு நன்றி கூறினர். இக்குளம் தூர்வாரப்பட்டு நீர் நிரம்பும்போது, 2 ஆயிரம் மக்கள் தினமும் பயனடைவார்கள். தினமும் 15 ஆயிரம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். மேலும் மக்கள் குளிப்பதற்கு , வீட்டு தேவைகளுக்கு , கால்நடைகளுக்கு என இக்குளம் சேவையாற்றும் என்பது குறிப்பிடதக்கது. M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, இம்மாத இறுதிக்குள் பணிகளை நிறைவடைய செய்ய வேண்டும் என்றும், தனது முயற்சியால் படித்துறைகளும் கட்டிக் கொடுக்கப்படும் என்றார். தகவல் நாகை சட்டமன்ற அலுவலகம் 05.07.2017