சென்னை.ஜூலை.06., நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டமன்றத்தில் “தமிழகத்துக்கு விலக்கு கேட்டு” நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ என்ற அமைப்பு சார்பில் தோழர்.பிரிண்ஸ் கஜேந்திரபாபு உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்.
அதில் CPM சார்பில்
ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, திமுக சார்பில் R.S.பாரதி M.P, விசிக சார்பில் தொல்.திருமாவளவன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு MLA, காங்கிரஸ் சார்பில் ஹிதாயத்துல்லாஹ், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ் MLA உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் நாங்கள் மூவரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூறினர்.
சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்வு குறித்து தான் இரண்டு முறை பேசியதாக தமிமுன் அன்சாரி அங்கு நினைவு கூர்ந்தார்.
முன்னதாக மேற்கண்ட தலைவர்கள் ஒன்றாக நின்று நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
சென்னை.
06.07.17