புதுச்சேரியில் நடப்பது ஜனநாயகப் படுகொலை! மஜக கடும் கண்டனம்!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

யூனியன் அந்தஸ்து பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் நடைப்பெற்று வரும் அரசியல் குழப்பங்கள் நாட்டையே அதிர்சியில் ஆழ்த்தி வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எதிராக கவர்னர் கிரண்பேடி செய்து வரும் நடவடிக்கைகள் கடும் கண்டணத்திற்குரியதாகும்.

பச்சையாக சொன்னால் மத்திய அரசின் துணையோடு அரசியல் ரவுடித்தனங்களை அவர் அரங்கேற்றி வருகிறார் என்பதுதான் உண்மையாகும்.

மத்திய அரசு, இரட்டை தலைமைத்துவத்தை உருவாக்கி ஒரு மாநில அரசின் நிர்வாகத்தை சீர்குலைப்பது என்பது ஜனநாயக படுகொலையாகும்.

உச்சகட்டமாக அங்கு மத்திய அரசு  மூன்று பேரை நியமன உறுப்பினர்களாக மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் அறிவித்ததும், அதற்கு ஆதரவாக கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருப்பதும் புதுச்சேரி மாநில மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியில் ஆளும் பஜக அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் சர்வாதிகார போக்குகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களின் உரிமைகளையும் அழிக்க நினைப்பது இந்திய அரசியலை சீர்குலைக்கும் போக்கு என்பதில் ஐயமில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடியின் அத்துமீறல்களுக்கு எதிராக அங்குள்ள அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும், தொண்டு இயக்கங்களும் முன்னெடுக்கும் அனைத்து விதமான போராட்டங்களையும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
06.07.17