நாகை தொகுதிக்குட்பட்ட புத்தூர் தாமரை குளம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது. இதில் சர்ச்சைகள் இருந்ததை அறிந்த MLA அவர்கள் ஊர் மக்களை அழைத்து சமாதானப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.
தற்போது ஊர் மக்கள் ஒத்துழைப்போடு 2 ஏக்கர் பரப்பளவில் தூர்வாரும் பணிகள் துவங்கி உள்ளது. 2 ஏக்கர் பரப்பளவுள்ள இக்குளம் நுாற்றாண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுவாதல், மக்கள் MLA வுக்கு நன்றி கூறினர்.
இக்குளம் தூர்வாரப்பட்டு நீர் நிரம்பும்போது, 2 ஆயிரம் மக்கள் தினமும் பயனடைவார்கள். தினமும் 15 ஆயிரம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். மேலும் மக்கள் குளிப்பதற்கு , வீட்டு தேவைகளுக்கு , கால்நடைகளுக்கு என இக்குளம் சேவையாற்றும் என்பது குறிப்பிடதக்கது.
M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, இம்மாத இறுதிக்குள் பணிகளை நிறைவடைய செய்ய வேண்டும் என்றும், தனது முயற்சியால் படித்துறைகளும் கட்டிக் கொடுக்கப்படும் என்றார்.
தகவல்
நாகை சட்டமன்ற அலுவலகம்
05.07.2017