திரு.முக.ஸ்டாலின் மற்றும் தனபாலுடன் மஜக பொதுச் செயலாளர் சந்திப்பு…!

சென்னை.ஜூலை.06., கண்புரை அறுவை சிகிச்சை செய்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் திரு.முக.ஸ்டாலின் அவர்கள் இன்று அவைக்கு வருகை தந்தார். அவரை முதல்வர் எடப்பாடி அவர்கள் நலம் விசாரித்தார்.

அதே போல் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் எதிர்க்கட்சி தலைவரின் அறைக்கு சென்று திரு.முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார், அவருடன் தனியரசு MLA அவர்களும் சென்றிருந்தார்.

கண்ணாடி (Cooling Glass) அணிந்திருந்த அவரைப் பார்த்து இப்போது கண்ணாடி அணிந்தும் இன்னும் அழகாக இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் என தமிமுன் அன்சாரி அவர்கள் குறியதும் திரு.முக.ஸ்டாலின் அவர்கள் சிரித்துவிட்டார். அருகில் இருந்த திமுக MLA க்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிறகு மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சபாநாயகர் அறைக்கு சென்று மருத்துவமனையிலிருந்து திரும்பிய சபாநாயகர் தனபால் அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

“ஓய்வில்லாமல் அவைக்கு வந்துவிட்டிர்களோ… இன்னும் ஓய்வுவெடுத்திருக்கலாமே…” என்று கூறினார். தற்போது நலமாக இருப்பதால் வந்துவிட்டேன் என்றார்.

தகவல்;
தகவல் தொழிநுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
சட்டமன்ற வளாக செய்தி குழு
சென்னை.
06.07.2017