திருவள்ளூர்.நவ.07., மீஞ்சூர் பகுதி அத்திப்பட்டு புதுநகரில் மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவு தேங்கி நின்றது. தொடர் மழையால் வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. நேற்றும் பாதிக்கப்பட்ட மக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவைப் பெற்றுக் கொண்ட மக்கள் எத்தனை மழை வந்தாலும் எங்கள் பகுதி மக்களுக்கு மஜகவினர் தான் உணவு வழங்குகின்றனர் என நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் பணிகளை வெகுவாக பாராட்டி மஜகவுடன் இணைந்து பணியாற்ற பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர். மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தலைமையில் நிவாரணப்பணிகள் நடைபெற்றன. அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் S.M நாசர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணைச் செயலாளர் கரிமுல்லா, மாவட்ட வர்த்தகரணி செயலாளர் நிஜாம், மாவட்ட இளைஞரணி செயலார் ஜகன், மீஞ்சூர் பகுதி செயலாளர் அன்சர், திருவொற்றியூர் பகுதி செயலாளர் கதிர் உசேன், பகுதி பொருளாளர் ஷஹின்ஷா, துணைச் செயலாளர் ஆரிஃப் மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_கிழக்கு 06.11.17
செய்திகள்
கோவை NP இட்டேரியில் வீடுகளை இடிக்க முயற்சி செய்த PWD அதிகாரிகள்..! தடுத்து நிறுத்திய மஜக-வினர்..!
கோவை.நவ.06., கோவை மாநகராட்சி 95-வது வார்டு NP இட்டேரில் 60 ஆண்டுகளாக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் வசித்து வருகிறார்கள். இன்று காலை எந்தவித கணக்கெடுப்பு பணியும் நடத்தாமல் எந்தவித முன்னரிவிப்பும் இல்லாமல் அந்த வீடுகளை இடிப்பதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் புல்டோசருடன் சென்றனர். தகவல் அறிந்த மஜக மாவட்ட துணை செயலாளர் ரபீக், கிணத்துக்கடவு பகுதி செயலாளர் ஜாபர்அலி, பொருளாளர் காதர் மற்றும் நிர்வாகிகள் அபு, ஹாருண்ரஷீது, அக்பர், ஹக்கீம், மற்றும் குறிச்சிப்பிரிவு கிளை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளை இடிக்க முற்பட்ட அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். அதை தொடர்ந்து தாசில்தார், மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய மஜகவினர் எந்த வித முன்னரிவிப்பும் இன்றி வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரித்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக மஜக நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் தற்போது வீடுகள் இடிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார். மேலும் இது குறித்து மாநகராட்சி ஆணையர் அவர்களை சந்திக்க அறிவுறுத்தினார் அதை தொடர்ந்து ஆணையரை சந்திக்க மஜக நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள் சென்றனர், ஆனால்
மஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாககுழு கூட்டம்…!
தூத்துக்குடி.நவ.5., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாககுழு கூட்டம் நேற்று 05/11/2017 தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் முன்னிலையில் வகித்தனர். இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல் ஹமீத் அவர்கள் கலந்து கொண்டார். டிசம்பர்-6 அன்று பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதியான தீர்ப்பை விரைந்து வழங்க கோரி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தை தூத்துக்குடி தெ மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தூத்துக்குடி தெ மாவட்டத்தில் உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கிளை கட்டமைப்பு வளிமைபடுத்துவது குறித்தும் விவாதிக்கபட்டு நல்ல முடிவு எடுக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #தூத்துக்குடி தெற்கு மாவட்டம், 05/11/2017
அரசர்குளத்தில் மஜக புதிய கிளை உதயம்..!
புதுகை.நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் தென்பாதி பகுதியில் புதிய கிளை துவக்க நிகழ்ச்சி இன்று 05.11.17 ஞாயிறு அன்று மேலப்பாலம் மஜக கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஒலி முகம்மது, சையது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முபாரக் அலி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து பேசினார். இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஒன்றிய துணைச் செயலாளர் ஷாஜஹான், நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகரப் பொருளாளர் அப்துல் கரீம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இறுதியில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகம்மது காலித் நன்றி கூறினார். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் செயலாளர் முகம்மது அலி ஜின்னா, பொருளாளர் அலீக் ரஹ்மான், துணைச் செயலாளர்கள் சேக் இஸ்மாயில், முகம்மது நஜார், மருத்துவ அணி செயலாளர் முஹம்மது கனி, வர்த்தகரணி செயலாளர் முஹம்மது இம்ரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். #தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புதுகை_கிழக்கு_மாவட்டம்
IKP சார்பில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு..!
வேலூர்.நவ.05., வேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக இன்று (05.11.17) R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி உரையாக மவ்லவி A.முஹம்மத் யூனுஸ் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தகவல்: #IKP_ஊடகபிரிவு #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 05.11.2017