தூத்துக்குடி.நவ.5., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாககுழு கூட்டம் நேற்று 05/11/2017 தூத்துக்குடியில் மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் முன்னிலையில் வகித்தனர். இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் A.R.சாகுல் ஹமீத் அவர்கள் கலந்து கொண்டார்.
டிசம்பர்-6 அன்று பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதியான தீர்ப்பை விரைந்து வழங்க கோரி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தை தூத்துக்குடி தெ மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் தூத்துக்குடி தெ மாவட்டத்தில் உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கிளை கட்டமைப்பு வளிமைபடுத்துவது குறித்தும் விவாதிக்கபட்டு நல்ல முடிவு எடுக்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#தூத்துக்குடி தெற்கு மாவட்டம்,
05/11/2017