கோவை.நவ.06., கோவை மாநகராட்சி 95-வது வார்டு NP இட்டேரில் 60 ஆண்டுகளாக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் வசித்து வருகிறார்கள்.
இன்று காலை எந்தவித கணக்கெடுப்பு பணியும் நடத்தாமல் எந்தவித முன்னரிவிப்பும் இல்லாமல் அந்த வீடுகளை இடிப்பதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் புல்டோசருடன் சென்றனர்.
தகவல் அறிந்த மஜக மாவட்ட துணை செயலாளர் ரபீக், கிணத்துக்கடவு பகுதி செயலாளர் ஜாபர்அலி, பொருளாளர் காதர் மற்றும் நிர்வாகிகள் அபு, ஹாருண்ரஷீது, அக்பர், ஹக்கீம், மற்றும் குறிச்சிப்பிரிவு கிளை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளை இடிக்க முற்பட்ட அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர்.
அதை தொடர்ந்து தாசில்தார், மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய மஜகவினர் எந்த வித முன்னரிவிப்பும் இன்றி வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரித்தனர்.
பின்னர் இது குறித்து உடனடியாக மஜக நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் தற்போது வீடுகள் இடிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார்.
மேலும் இது குறித்து மாநகராட்சி ஆணையர் அவர்களை சந்திக்க அறிவுறுத்தினார் அதை தொடர்ந்து ஆணையரை சந்திக்க மஜக நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்கள் சென்றனர், ஆனால் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நாளை 07.11.17 மாநகராட்சி ஆணையரை நேரில் சந்திக்க மஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
06.11.17