சென்னை.மார்ச்.11., இன்று சட்டப் பேரவை கூடியதும் கேள்வி நேரத்தில், நாகூர் பட்டினச் சேரி வெட்டாற்று வடகரையில் தூண்டில் வளைவு துறைமுக அமைக்கப்படுமா? என நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், அங்கு 20 கோடி மதிப் 370 மீட்டர் நீளத்துக்கு அங்கு தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்கப்படும் என பதில் அளித்தார். அப்போது கூறிய தமிமுன் அன்சாரி MLA அவர்கள்,அருகில் காரைக்காலில் தனியார் துறைமுக பல் சரக்கு கப்பல் போக்குவரத்து காரணமாக மணல் திட்டு குவிவதாகவும், அதில் படகுகள் மோதி மீனவர்கள் உயிர் பலி ஏற்படுவதாகவும், எனவே விரைந்து பணிகளை தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.. பிறகு அமைச்சர் அறிவிப்புக்கு அவர் நன்றி கூறினார். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டமன்ற_வளாகம் 11.03.2020
Author: admin
புதிய வடிவ ஜனநாயக போராட்டங்களை கையிலெடுப்போம்..! சட்ட மன்ற வளாகத்தில் ஒரு மணி நேர காத்திருப்பு போராட்டத்திற்கு பின்பு முதமிமுன் அன்சாரி MLA அறிவிப்பு.!
சென்னை.மார்ச்.11., இன்று தமிழக சட்டமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி, திமுக, காங்கிரஸ், மஜக, IUML கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசினார். இதில் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என மாண்புமிகு துணை முதல்வரும், மாண்புமிகு அமைச்சர்களும் கூறுவது உங்கள் நல்லெண்ணத்தை காட்டுகிறது. ஆனால் பீகார் மாநில அரசு சட்டபேரவையில் இதற்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது போன்று, ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இதனால் எல்லா மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெலுங்கானா முதல்வரே கூறியுள்ளார். எனவே நீங்கள் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி வெளிநடப்பு செய்தார். பிறகு 1 மணி நேரம் சட்டமன்ற வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் அதிரடியாக ஈடுபட்டார். அங்கிருந்த காவல்துறையினர் "உங்களை கைது செய்கிறோம்" என்றவுடன் கைதுக்கு தயாராகி வண்டியில் ஏற முற்பட்டபோது, உங்களை கைது செய்யவில்லை என்று கூறி, நீங்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தலாம் என காவல்துறை கூறியது. அதன் பிறகு காத்திருப்பு போராட்டத்தை அங்கு அவர் தொடர்ந்தார். அப்போது ஊடகங்களிடம் பேசியவர், பாஜக கூட்டணியில் உள்ள
குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம்…! மஜக மாநில துணைச் செயலாளர் புது மடம் அணீஸ் கண்டன உரை..!
சென்னை.பிப்.11., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் பக்ருதீன் மற்றும் பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர் மேற்கு மாவட்டம் 10-03-2020
நாகை இரண்டாம் நாள் தர்ணா போராட்டத்தில் மஜக! மாநில செயலாளர் நாச்சி குளம் தாஜு தீன்பங்கேற்று கண்டன உரை!
மார்ச்.11, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் 09/03/2020 காலை முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இரண்டாம் நாள் போராட்டமான நேற்று மஜக சார்பில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் கலந்து கொண்டு குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரையாற்றினார். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், MJVS மு.மாவட்ட செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகூர் ஜாகிர், நகர நிர்வாகிகள் செல்லதுரை, செமீர்தீன், அனாஃப், பாரக் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம். 10/03/2020
மஜக கோவை மாவட்டநிர்வாகிகளுடன் விருந்தோம்பல்!! முதமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!
மார்ச்.02., கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற வாழ்வுரிமை மாநாடு மாபெரும் எழுச்சியுடன் நடைப்பெற்றது. அதற்காக 1மாதமாக தியாக மனப்பான்மையுடன் இரவு பகலாக உழைத்த கோவை மாவட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கு தலைமையின் சார்பில் விருந்தோம்பல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி,MLA. அவர்கள் உரையாற்றியதாவது. https://m.facebook.com/story.php?story_fbid=2308524319247330&id=700424783390633 ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியை இம்மாநாடு கண்டுள்ளது செம்மொழி மாநாட்டிற்கு இணையான ஒரு மாநாடென்றால் அது மஜக வின் மாநாடுதான் என பத்திரிக்கையாளர்கள் கூறியதை நினைவூட்டினார். மேலும் இம்மாநாட்டிற்காக கோவையில் மாநில பொருளாளரும் மாநாட்டுக்குழு தலைவருமான எஸ்.எஸ். ஹாருண்ரஷீது, அவர்கள் தலைமையில் பிரச்சாரக்குழு, வரவேற்புக்குழு, நிதிக்குழு, மைதான பணிகள் குழு, உள்ளிட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு. அந்த குழுக்களின் தொடர் சூறாவளி பணிகளை மிகவும் விலாவரியாக சிலாகித்து பேசினார். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து சொந்த காசுகளை செலவு செய்து தன்னெழுச்சியுடன் பொதுமக்களும், ஜமாத்தினர்களும், திரளாக வருகை தந்ததை பற்றி கூறியவர் அதற்காக உழைத்து தமிழகம் முழுவதும் உள்ள மஜக நிர்வாகிகளின் தியாக உழைப்பை நினைவுபடுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் மத்தியில்